பொது செய்தி

தமிழ்நாடு

'ரெம்டெசிவிர்' கேட்டு மக்களை அலைய விடாதீர்கள்!; தனியார் மருத்துவமனைக்கு அரசு அறிவுறுத்தல்

Updated : ஏப் 29, 2021 | Added : ஏப் 29, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: ''ரெம்டெசிவிர் மருந்து கேட்டு மக்களை, தனியார் மருத்துவமனைகள் அலைய விடுவது சரியான நடைமுறை அல்ல. அவ்வாறு செய்யக்கூடாது. மருந்தை பதுக்குவோர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பொது சுகாதார துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறினார்.இது குறித்து அவர் கூறியதாவது:கடந்த சில நாட்களாக பொதுமக்கள், 'ரெம்டெசிவிர்' மருந்தை தேடி அலைகின்றனர். அந்த மருந்து உயிர்
Remdesivir, Covid, ரெம்டெசிவிர், மருந்து

சென்னை: ''ரெம்டெசிவிர் மருந்து கேட்டு மக்களை, தனியார் மருத்துவமனைகள் அலைய விடுவது சரியான நடைமுறை அல்ல. அவ்வாறு செய்யக்கூடாது. மருந்தை பதுக்குவோர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பொது சுகாதார துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:கடந்த சில நாட்களாக பொதுமக்கள், 'ரெம்டெசிவிர்' மருந்தை தேடி அலைகின்றனர். அந்த மருந்து உயிர் காக்கும் மருந்து கிடையாது என, உலக சுகாதார நிறுவனமும், தமிழக அரசும் தெளிவாக கூறியுள்ளது. சில நேரங்களில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக்கூடிய நாட்களை வேண்டுமானால், அந்த மருந்துகள் குறைக்கலாம். இந்த ஊசி மருந்தை போட்டால், கொரோனாவில் இருந்து வெளியில் வரலாம் என்ற சூழல் இல்லை. அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு சிலருக்கு, இந்த மருந்து தேவைப்படலாம்.அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு இருப்பு உள்ளது.


latest tamil newsயாருக்கு தேவையோ, அவர்களுக்கு டாக்டர்கள் கொடுத்து விடுவர்.இந்த மருந்து ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் இருப்பு உள்ளது. இல்லாத மருத்துவமனைகளின் நிர்வாகத்திற்கு, அரசின் கோரிக்கை இது தான்.ஒரு மருத்துவமனை நடத்துகிற உங்களால், மருந்து வாங்கி கொடுக்க முடியவில்லை என்ற நிலையில், சாமானிய மனிதர்களிடம், மருந்து சீட்டை கொடுத்து, மருந்து வாங்கி வாருங்கள் என, சொல்வது சரியான முன்னுதாரணமாக இருக்காது.

உங்களால் வாங்க முடியாதபோது, அவர்கள் எங்கே போய் வாங்குவர். இதனால், தேவையில்லாத பதற்றம் ஏற்படுகிறது. தற்போது, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், தேவைப்படும் நோயாளிகளுக்கு, 'ரெம்டெசிவிர்' மருந்து விற்கப்படுகிறது. இந்த மருந்து விற்பனை மையங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ரெம்டெசிவிர் மருந்தை தேவையின்றி பயன்படுத்த வேண்டாம். மருந்தை பதுக்கினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செல்வ விநாயகம் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devan - Chennai,இந்தியா
29-ஏப்-202115:59:20 IST Report Abuse
Devan Why can't the hospitals arrange the medicine with the help of government.
Rate this:
Cancel
29-ஏப்-202115:58:10 IST Report Abuse
கிருஷ்ணசாமி சில ஊடகங்கள் தனியார் மருத்துவமனைகள் வேண்டுமென்றே மக்களை பீதிக்கு உள்ளாக்குகின்றனர். அரசுக்கும் நம் இந்தியா நாட்டிற்கும் அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர். அவர்களை இனம் கண்டு கடுமையாக தண்டிக்க வேண்டும்.
Rate this:
Cancel
MURUGESAN - namakkal,இந்தியா
29-ஏப்-202112:56:35 IST Report Abuse
MURUGESAN ரெம்டெசிவிர்' மருந்து உயிர் காக்கும் மருந்து கிடையாது என, உலக சுகாதார நிறுவனமும், தமிழக அரசும் தெளிவாக கூறியுள்ளது. சில நேரங்களில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக்கூடிய நாட்களை வேண்டுமானால், அந்த மருந்துகள் குறைக்கலாம். இந்த ஊசி மருந்தை போட்டால், கொரோனாவில் இருந்து வெளியில் வரலாம் என்ற சூழல் இல்லை. அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X