கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி குறித்து வதந்தி; மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதத்துடன் முன்ஜாமின்

Updated : ஏப் 29, 2021 | Added : ஏப் 29, 2021 | கருத்துகள் (54)
Share
Advertisement
சென்னை: கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் மற்றும் நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 16ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மறுநாள் அதிகாலை 4.35 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்படுவதற்கு முதல் நாள்
MansoorAliKhan, CovidVaccine, Bail, Fine, ChennaiHC, மன்சூர் அலிகான், கொரோனா, தடுப்பூசி, வதந்தி, அபராதம், முன்ஜாமின்

சென்னை: கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் மற்றும் நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 16ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மறுநாள் அதிகாலை 4.35 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்படுவதற்கு முதல் நாள் நடிகர் விவேக் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவின. ஆனால், விவேக் இறப்பிற்கும், தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை என மருத்துவர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் விளக்கமளித்தனர். இதற்கிடையே விவேக்கின் இறுதி சடங்கில் பங்கேற்ற நடிகர் மன்சூர் அலிகான், தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை அளித்து பேட்டியளித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


latest tamil newsஇதனையடுத்து, கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ், நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான், முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. பின்னர், முன்ஜாமின் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தண்டபாணி, மன்சூர் அலிகானுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் வழங்கியுள்ளார். மேலும், அபராதமாக சுகாதாரத்துறைச் செயலாளர் பெயரில் ரூ.2 லட்சத்திற்கு டிமாண்ட் டிராப் எடுத்து கொரோனா தடுப்பூசி வாங்க நிதியாக வழங்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி குறித்து எவ்வித வதந்தியும் பரப்பக்கூடாது, பதற்றத்தை உருவாக்க கூடாது என்றும் நிபந்தனை பிறப்பிக்கபட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஏப்-202111:08:49 IST Report Abuse
Saravanan இவரது பேச்சினை ஒளிபரப்பிய மீடியா மாபியாக்களுக்கு ஒவ்வொருவருக்கும் பத்து கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் அப்பத்தான் பொய் செய்தியை ஒளிபரப்புவதை நிறுத்துவானுங்க
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
30-ஏப்-202105:46:55 IST Report Abuse
 N.Purushothaman கைது செய்யாமல் விட்டது பெரும் தவறு ..நீதிமன்றங்கள் அரசிடம் மட்டுமே தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தும் ..
Rate this:
Cancel
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) ஒருவேளை நடிகர் விவேக்கின் மரணம் எதனால் நிகழ்ந்தது என்று என்றேனும் ஒருநாள் வெளியுலகத்திற்கு தெரிய வந்தால் அன்று மற்றவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று ஏற்றுக்கொள்வார்களா? ஒரு சில மருத்துவர்கள் அல்லது மருத்துவ அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்னர் பிணத்தையே மாற்றி பிரேத பரிசோதனை நடத்தி பின்னர் பிணத்தை மாற்றி கொடுத்து மிகப்பெரிய சர்ச்சையில் மாட்டினார்கள் அவர்களுக்கும் இதே போல பல லட்சங்களை அபராதமாக விதித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அந்த பணத்தை தந்திருக்கலாம்? குற்றம் யார் செய்தாலும் குற்றம் தானா இல்லை அதற்கும் ஏதாவது தகுதி, தராதரம், செல்வாக்கு இதெல்லாமே இருக்கிறதோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X