புதுடில்லி: கொரோனாவை எதிர்த்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இரவு பகலாக போராடி வரும் சூழலில், அதனை வைத்து காங்கிரஸ் மோசமான அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: மிகக் கொடிய பெருந்தொற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். அரசியல் செய்வதற்கு இது சரியான நேரமல்ல. கொரோனாவை எதிர்த்து இரவு பகலாகப் போராடி வருகிறோம். காங்கிரஸைப் போல் மோசமான அரசியல் செய்யவில்லை. பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக கடந்த ஓராண்டாக கடுமையாகப் போராடி சாதனைகள் புரிந்துள்ளது. சாமானிய மக்களின் நலன் காக்க இன்றும் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

முன்பு வென்டிலேட்டர்கள், முகக்கவசங்கள், பிபிஇ கிட்களுக்குத் தட்டுப்பாடு இருந்தது. இப்போது இவற்றில் எல்லாம் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் மோசமான அரசியல் செய்கிறது. முன்னதாக இந்திய தயாரிப்பு தடுப்பூசிகள் குறித்து சந்தேகம் எழுப்பி குழப்பம் விளைவித்தனர். ஆனால் அந்த தடுப்பு மருந்துகள் சர்வதேச அங்கீகாரம் பெற்றுவிட்டதால் இப்போது அவற்றின் விலை பற்றி பேசுகின்றனர். மக்களின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும்போது அரசியல் செய்ய வேண்டாம் என காங்கிரஸை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE