ஊட்டி: கர்நாடாகவில், கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அம்மாநில அரசு தடுப்பு நடவடிக்கையில் திணறி வருகிறது. இதனால், இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.
அங்கு, கொரோனா பரிசோதனையில், 3500 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர்களின், மொபைல்போனுக்கு அம் மாநில சுகாதார துறையினர் கொரோனா தொற்று குறித்து தகவல் அனுப்பினர். பின், மருத்துவமனையில் சிகிச்சை பெற அழைத்த போது அனைவரும், மொபைல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர். சம்மந்தப்பட்ட பகுதிக்கு சுகாதார துறையினர் சென்ற போது, அங்கு சம்மந்தப்பட்ட நபர்கள் இல்லை. தப்பிய தொற்று நபர்களை அம்மாநில அரசு போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கக்க நல்லா சோதனை சாவடி வழியாக நீலகிரிக்கு ஊடுருவ கூடும், என்பதால் கக்க நல்லா சோதனை சாவடியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா கூறுகையில்,சோதனை சாவடிகளில் தகுந்த உரிய ஆவணத்தை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். கேரளா எல்லை மூடப்படவில்லை. அத்தியாவசிய வாகனங்கள் சென்று வருகிறது. கர்நாடகா மாநிலத்தில், தொற்று அதிகரிப்பால் அங்கு மாவட்ட எல்லை மூடப் பட்டுள்ளது. தப்பிய தொற்று நபர்கள் நீலகிரிக்கு நுழைவதை தடுக்க கக்க நல்லா சோதனை சாவடியில் பாதுகாப்பு பலப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE