ம.பி.,க்கு அதிகம் டில்லிக்கு குறைவு ஏன்? - ஆக்சிஜன் சப்ளை குறித்து ஐகோர்ட் கேள்வி

Updated : ஏப் 29, 2021 | Added : ஏப் 29, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியின் தேவை நிறைவேற்றப்படாத நிலையில், மத்திய பிரதேசத்திற்கு தேவையை விட அதிக ஆக்ஸிஜன் ஏன் ஒதுக்கப்பட்டது என்று டில்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது.டில்லியின் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை நீடிப்பது தொடர்பான வழக்கை அம்மாநில உயர்நீதிமன்றம் இன்று (ஏப்.,29) விசாரித்தது. டில்லியில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது.
DelhiHC, Centre Allocated, MoreOxygen, MadhyaPradesh, Demanded, Asks, Centre

புதுடில்லி: டில்லியின் தேவை நிறைவேற்றப்படாத நிலையில், மத்திய பிரதேசத்திற்கு தேவையை விட அதிக ஆக்ஸிஜன் ஏன் ஒதுக்கப்பட்டது என்று டில்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது.

டில்லியின் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை நீடிப்பது தொடர்பான வழக்கை அம்மாநில உயர்நீதிமன்றம் இன்று (ஏப்.,29) விசாரித்தது. டில்லியில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது. தினசரி இறப்பு எண்ணிக்கை 400-ஐ நெருங்கி வருகிறது. பல ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். முன்னெச்சரிக்கையாக பலர் ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வதும் நடக்கிறது. அவர்களிடமிருந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து வருகினறனர்.


latest tamil news


இந்நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். மத்தியப் பிரதேசத்தின் ஆக்சிஜன் தேவை 445 மெட்ரிக் டன், 540 மெட்ரிக் டன்னாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவுக்கு 1,500 மெட்ரிக் டன் தேவை. ஆனால் 661 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் இறக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் தேவை x ஆக இருந்தால், எதற்காக x + y கொடுத்தீர்கள்? டில்லிக்கு ஏன் y கூட கொடுக்கவில்லை? என நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ரேகா பல்லி தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியது.

அதிக ஆக்சிஜன் வழங்குவதற்கான காரணங்களை மத்திய அரசு தெரிவிக்கும் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களிடமிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகளை பறிமுதல் செய்யக் கூடாது என உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஏப்-202111:23:13 IST Report Abuse
Saravanan டெல்லி அதிகபட்ச ஆயிரத்து நானூற்று எண்பத்துநான்கு கிலோமீட்டர்கள் மூணு லட்சத்து எட்டாயிரம் கிலோமீட்டர்கள் டெல்லியில் சுலபமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு சிலிண்டர்களை மாற்றி விடலாம் ஆனால் மத்தியப்பிரதேசத்தில் அப்படி செய்ய முடியுமா நீதிபதி என்றால் வைத்த பிரதிவாதத்தை வைத்து தீர்ப்பு சொல்ல கூடாது அறிவாளிகளும் முட்டலாகா முடியும் என்பதற்கு சில நேரத்தில் உதாரணம் கிடைக்கிறது
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
30-ஏப்-202110:39:31 IST Report Abuse
R. Vidya Sagar எனக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்.
Rate this:
Cancel
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
30-ஏப்-202107:02:52 IST Report Abuse
Ashok Subramaniam விபின் "சங்கி"-யே கேட்டாச்சா? பின்ன என்னப்பா.. சங்கியே சங்கியைக் கேட்டாச்சில்ல.. பின்ன என்ன இன்னும் கூவறிங்க
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
30-ஏப்-202108:03:38 IST Report Abuse
 Muruga Velநீங்க எதுக்கு சங்கு ஊதறீங்க .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X