சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சோப்பு முக்கியம் பாப்பா

Added : ஏப் 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொரோனா வைரசை தடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கிருமிநீக்கி திரவத்தை கைகளில் பூசுவது நல்லது. ஆனால், இத்தகைய கிருமிநீக்கிகளால் 'நொரோ வைரஸ்' என்ற கிருமியை தடுக்க முடிவதில்லை.அண்மையில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில், மருத்துவ மையங்களுக்கு வாயுத் தொல்லையால் அவதியுறும் குழந்தைகளின் வரத்து நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.இதற்குக் காரணம், கொரோனா
சோப்பு முக்கியம் பாப்பா

கொரோனா வைரசை தடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கிருமிநீக்கி திரவத்தை கைகளில் பூசுவது நல்லது. ஆனால், இத்தகைய கிருமிநீக்கிகளால் 'நொரோ வைரஸ்' என்ற கிருமியை தடுக்க முடிவதில்லை.

அண்மையில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில், மருத்துவ மையங்களுக்கு வாயுத் தொல்லையால் அவதியுறும் குழந்தைகளின் வரத்து நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

இதற்குக் காரணம், கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க குழந்தைகளுக்கு பெற்றோர், 'ஹேண்ட் சானிடைசர்' திரவங்களை நம்பியிருப்பதே என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். நியூசிலாந்து மற்றும் தைவான் போன்ற நாடுகளிலும் தற்போது நொரோ வைரஸ் தொற்றுகளால் குழந்தைகளுக்கு வாயுத் தொல்லை, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை அதிகரித்துள்ளன.

ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்கள் கொரோனா வைரசை தடுத்தாலும், நொரோ போன்ற சில வைரஸ்களை அவ்வளவாகத் தடுப்பதில்லை. இதற்கு என்ன மாற்று? சோப்பினால் கைகளுக்கு சோப்பு போட்டு, 20 விநாடிகளுக்கும் குறையாமல் ஊறவைத்த பிறகு தண்ணீரால் கை கழுவுவது மட்டுமே நொரோ வைரசை போக்க உதவும். எனவே, ஆஸ்திரேலிய மருத்துவர்கள், மீண்டும் சோப்பு போட்டு கைகளைக் கழுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த துவங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundaram sadagopan - Bengaluru,இந்தியா
01-மே-202110:10:03 IST Report Abuse
sundaram sadagopan சோப்பை இறைவனின் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம் . சோப் பல கோடி மக்களை காப்பாற்றி இருக்கிறது இன்னும் காப்பாற்றி கொண்டிருக்கிறது. நவீன உலகம் சோப்பைதான் அடிப்படையாக கொண்டுள்ளது . ஏன் என்றால் சுகாதாரம் தான் சொத்து . மக்கள் சோப்பை அடிக்கடி உபயோகித்தால் ஆரோக்கியமாக இருக்கலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X