சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கோவிட் பிரசாரம்: யார் சொன்னால் எடுபடும்

Added : ஏப் 29, 2021
Share
Advertisement
கொரோனாவின் இரண்டாம் அலை வேகமெடுப்பது தெரிந்தும், பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை கடைப்பிடிப்பதில்லை. ஏன்? கடந்த பொது முடக்கத்தின்போது, இத்தாலியில் 1,100 பேரிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, இதற்கு பதில் சொல்கிறது. பொது சுகாதார பிரசாரங்களில், அரசியல்வாதிகள் சொல்வதைவிட, விஞ்ஞானிகள் சொன்னால் தான் மக்கள் கேட்பர் என்கிறது அந்த ஆய்வு. 'ராயல் சொசைட்டி ஓப்பன்
 கோவிட் பிரசாரம்: யார் சொன்னால் எடுபடும்

கொரோனாவின் இரண்டாம் அலை வேகமெடுப்பது தெரிந்தும், பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை கடைப்பிடிப்பதில்லை. ஏன்? கடந்த பொது முடக்கத்தின்போது, இத்தாலியில் 1,100 பேரிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, இதற்கு பதில் சொல்கிறது. பொது சுகாதார பிரசாரங்களில், அரசியல்வாதிகள் சொல்வதைவிட, விஞ்ஞானிகள் சொன்னால் தான் மக்கள் கேட்பர் என்கிறது அந்த ஆய்வு. 'ராயல் சொசைட்டி ஓப்பன் சயின்ஸ்' இதழில் அந்த ஆய்வு வெளியாகியுள்ளது.

அதன்படி, அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் அல்லது அடையாளம் தெரிவிக்கப்படாத நபர்கள் என, மூன்று தரப்பினருள் யார் சொல்வதை நீங்கள் கேட்பீர்கள் என்று ஆய்வாளர்கள் கேட்டனர். அதற்கு, விஞ்ஞானிகள் சொல்வதை மட்டுமே நாங்கள் கடைப்பிடிப்போம் என, பெரும்பாலானோர் தெரிவித்தனர்.

எனவே, மக்களை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வைக்க வேண்டும் என்றால், அதற்கு, விளம்பரங்களில் அசல் மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், செவிலியர் போன்றவர்களையே பயன்படுத்துவது நல்ல பலன் தரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X