சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மருத்துவ ஆராய்ச்சியை இடறும் பெருந்தொற்று

Added : ஏப் 29, 2021
Share
Advertisement
ஓராண்டைக் கடந்தும் ஓயாத பெருந்தொற்று, இதர மருத்துவ முன்னேற்றங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. உதாரணமாக, புற்று நோய் ஆராய்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். உலக பொதுமுடக்கம், ஆய்வுக்கூடங்கள் மூடப்படுதல் அல்லது கொரோனாவுக்காக மடைமாற்றப்படுதல், ஆய்வு நிதிகள் குறைப்பு அல்லது நிறுத்தம் என்று புற்று நோய் ஆய்வுகள் நொண்டியடிக்கத் தொடங்கியுள்ளன.லண்டனிலுள்ள புற்று நோய்
 மருத்துவ ஆராய்ச்சியை இடறும் பெருந்தொற்று

ஓராண்டைக் கடந்தும் ஓயாத பெருந்தொற்று, இதர மருத்துவ முன்னேற்றங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. உதாரணமாக, புற்று நோய் ஆராய்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். உலக பொதுமுடக்கம், ஆய்வுக்கூடங்கள் மூடப்படுதல் அல்லது கொரோனாவுக்காக மடைமாற்றப்படுதல், ஆய்வு நிதிகள் குறைப்பு அல்லது நிறுத்தம் என்று புற்று நோய் ஆய்வுகள் நொண்டியடிக்கத் தொடங்கியுள்ளன.

லண்டனிலுள்ள புற்று நோய் ஆராய்ச்சி நிலைய வல்லுனர்கள் வெளியிட்டுள்ள கணிப்பு கவலை தருகிறது. அவர்களது மதிப்பீட்டின்படி, புற்று நோய் ஆராய்ச்சியின் வளர்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

புதிய ஆராய்ச்சிகளை விடுங்கள். ஏற்கனவே, ஆய்வகத்திலிருந்து வெளியேறி களப் பரிசோதனைகள், மருந்து ஆய்வுகள் என்ற நிலைகளை எட்டிவிட்ட புற்று நோய் ஆராய்சிகள், கொரோனா 2வது அலையால் நிச்சயம் பின்னுக்குத் தள்ளப்படும்.

அது மட்டுமல்ல, மருத்துவமனைகளில் பல், கண் சிகிச்சைகள் முதல், முதியோர் பிணியியல் வரை பல சிகிச்சைகள் முழுவீச்சில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவிட் -19 தடுப்பூசிகள் பரவலாகப் போடப்பட்டு, 'திரள் நோய் எதிர்ப்பு' விரைவில் உண்டானால் தான், மருத்துவத்தின் இதர துறைகள் தடையின்றி முன்னேற வழி பிறக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X