சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மூளைத் திறனை தாக்குமா கொரோனா

Added : ஏப் 29, 2021
Share
Advertisement
கோவிட் தாக்குதலை வெற்றிகரமாக சமாளித்து மீண்டோரில் சிலருக்கு, சில பக்கவிளைவுகள் நீடிக்கவே செய்கின்றன. செவித் திறன் குறைவது, வாசனை அறியும் திறன் குறைவது, சிந்தனை மற்றும் நினைவாற்றல் குறைவது போன்ற பக்க விளைவுகளுக்கு சிகிச்சை தர வேண்டிய அவசியம் இருப்பதாக, மேலை நாடுகளில் மருத்துவர்கள் கருதுகின்றனர்.சொல்லப்போனால், கோவிடுக்குப் பிந்தைய சிகிச்சை பிரிவுகளை, சில நாடுகள்
 மூளைத் திறனை தாக்குமா கொரோனா

கோவிட் தாக்குதலை வெற்றிகரமாக சமாளித்து மீண்டோரில் சிலருக்கு, சில பக்கவிளைவுகள் நீடிக்கவே செய்கின்றன. செவித் திறன் குறைவது, வாசனை அறியும் திறன் குறைவது, சிந்தனை மற்றும் நினைவாற்றல் குறைவது போன்ற பக்க விளைவுகளுக்கு சிகிச்சை தர வேண்டிய அவசியம் இருப்பதாக, மேலை நாடுகளில் மருத்துவர்கள் கருதுகின்றனர்.

சொல்லப்போனால், கோவிடுக்குப் பிந்தைய சிகிச்சை பிரிவுகளை, சில நாடுகள் துவங்கிஉள்ளன. குறிப்பாக, 'பிரெயின் போக்' எனப்படும் சிந்தனை மந்தத்தை போக்கும் சிகிச்சைகளை, தற்போது மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் மூளையை நேரடியாகத் தாக்குவது அரிது என, மருத்துவர்கள் கருதுகின்றனர். ஆனால், மூச்சுத் திணறல், ஆக்சிஜன் போதாமை போன்றவை, மூளையை தற்காலிகமாக பதம் பார்க்கவே செய்வதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மன ஒருமைப்பாடு, நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன் போன்றவை, கொரோனா குணமாகியும் பல வாரங்களுக்கு மந்தமாகவே இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இவை மெல்ல மெல்ல விலகும் என்று விட்டுவிட முடியாது. எனவே, இந்த அறிகுறிகளுக்கும் தற்போது சிகிச்சைகளை கண்டறிய ஆய்வுகள் நடக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X