சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

நம்பிக்கை தரும் மலேரியா தடுப்பூசி

Added : ஏப் 29, 2021
Share
Advertisement
கொரோனாவைப் போலவே ஆளைக் கொல்லும் அபாயம் கொண்டது மலேரியா. கொசுக்களால் பரவும் இந்த நோய்க்கு, தரமான மருந்து சிகிச்சைகள் வந்துவிட்டாலும், வளரும் நாடுகளில், வசதியற்றோரில் பலர் மலேரியா காய்சலால் இறப்பது தொடர்கிறது. எனவே தான் எல்லாருக்கும் மலேரியா தடுப்பூசி என்ற கனவை நனவாக்க, உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.இதற்கென குறைந்தது, 75 சதவீத செயல்திறன் கொண்ட மலேரியா
 நம்பிக்கை தரும் மலேரியா தடுப்பூசி

கொரோனாவைப் போலவே ஆளைக் கொல்லும் அபாயம் கொண்டது மலேரியா. கொசுக்களால் பரவும் இந்த நோய்க்கு, தரமான மருந்து சிகிச்சைகள் வந்துவிட்டாலும், வளரும் நாடுகளில், வசதியற்றோரில் பலர் மலேரியா காய்சலால் இறப்பது தொடர்கிறது. எனவே தான் எல்லாருக்கும் மலேரியா தடுப்பூசி என்ற கனவை நனவாக்க, உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.

இதற்கென குறைந்தது, 75 சதவீத செயல்திறன் கொண்ட மலேரியா தடுப்பூசியை உருவாக்கும்படி உலக சுகாதார நிறுவனம் அறைகூவல் விடுத்துள்ளது. அண்மையில், 'தி லான்செட்' இதழில் வெளியாகியுள்ள ஆய்வு ஒன்று, 77 சதவீத செயல்திறன் கொண்ட மலேரியா தடுப்பூசி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்21/எம்.எம் என்ற அந்த தடுப்பூசி தற்போது வெற்றிகரமான முதற்கட்ட சோதனையை தாண்டி, இரண்டாம் கட்ட சோதனைக்குச் செல்லவிருக்கிறது.

ஆண்டுக்கு நான்கு லட்சம் பேர் மலேரியாவுக்கு பலியாகின்றனர். இதில் பெரும்பாலானோர் பச்சிளம் குழந்தைகள் என்பது வலி தரக்கூடிய செய்தி. எனவே தான், தடுப்பூசி மலேரியாவுக்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்கும் என, உலக சுகாதார நிறுவனம் நம்புகிறது. அந்த நம்பிக்கை, விரைவில் நிஜமாகும் என்பது ஆறுதலான செய்தி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X