அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தி.மு.க., பெரும்பான்மை பெறும்: பரபரப்பு கருத்து கணிப்பு ?

Updated : ஏப் 30, 2021 | Added : ஏப் 29, 2021 | கருத்துகள் (298)
Share
Advertisement
சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வரும் 2-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.இதில் ரிபப்ளிக் சி.என்.எக்ஸ், ,இந்தியா டுடே, ஏபிபி, சி வோட்டர் வரை பல நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இதில் தி.மு.க, கூட்டணி பெரும்பான்மை பெறும் என தெரிகிறது.இதில் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைப்பர் என எதிர்பார்க்கப்பட்டு வரும்
தமிழகம், தி.மு.க., கூட்டணி, பெரும்பான்மை, கருத்து கணிப்பு

சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வரும் 2-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இதில் ரிபப்ளிக் சி.என்.எக்ஸ், ,இந்தியா டுடே, ஏபிபி, சி வோட்டர் வரை பல நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இதில் தி.மு.க, கூட்டணி பெரும்பான்மை பெறும் என தெரிகிறது.
இதில் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைப்பர் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இன்று வெளியாகியுள்ள கருத்து கணிப்புகளில், தமிழகத்தில் பெரும்பாலான கணிப்புகள் தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை பெறும் என தெரியவந்துள்ளது.


latest tamil newsஅதன் விவரம்:


தமிழகம்: மொத்த தொகுதிகள் 234
ரிபப்ளிக் சி. என்.எக்ஸ்: கருத்து கணிப்புஅ.தி.மு.க., கூட்டணி 56 முதல் 58 இடங்களிலும், தி.மு.க, கூட்டணி 160- 170 இடங்களிலும், மற்றவை 6 தொகுதிகளிலும் வெற்றி வெறும் என ரிபப்ளிக் டி.வி. சி.என்.எக்ஸ் வெளியிட்டுள்ளது.


பி- மார்க் கருத்து கணிப்புஅ.தி.மு.க., கூட்டணி 58 முதல் 68 இடங்களிலும்,, தி.மு.க, கூட்டணி 165- 190 இடங்களிலும், மற்றவை 12 தொகுதிகளிலும் வெற்றி வெறும் என பி-மார்க் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.


டுடேய்ஸ் சாணக்கியா:அ.தி.மு.க, கூட்டணி 46- 68 இடங்களிலும், தி.மு.க., கூட்டணி 164-182 இடங்களிலும் மற்றவை4 இடங்களிலும் வெற்றி பெறும் என டுடேய்ஸ் சாணக்கியா கணித்துள்ளது.


இந்தியா அஹெட் கருத்து கணிப்பு


தி.மு.க., கூட்டணி 165 முதல் 190 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 40 முதல் 65 இடங்களிலும், மற்றவை 13 இடங்களிலும் வெற்றி பெறும் என இந்தியா அஹெ ட் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.


சி ஓட்டர்ஸ்


தி.மு.க, கூட்டணி 160 முதல் 172 தொகுதிகளிலும், அ.தி.மு.க, கூட்டணி 58 முதல் 70 தொகுதிகளிலும், மற்றவை 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் 'சி' ஓட்டர்ஸ் கணித்துள்ளது.

மேலும் சில நிறுவனங்களின் கருத்து கணிப்புகள் வாயிலாக தி.மு.க, பெரும்பான்மை பெற வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (298)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samaniyan - Chennai ,இந்தியா
30-ஏப்-202117:40:42 IST Report Abuse
Samaniyan Corona situation will worsen if DMK comes to power. They have to first understand the problem they face. They have to believe the officials and act according to their advice. And more importantly they should not try to make money in procurement. I doubt their honesty.
Rate this:
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஏப்-202120:59:11 IST Report Abuse
முக்கண் மைந்தன் That's why India IS like this for the past seven years....
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
30-ஏப்-202117:02:49 IST Report Abuse
M.COM.N.K.K. ஆம் கண்டிப்பாக நடக்கும் 2016 கருத்துக்கணிப்புபோல் நடக்கும் சரிதானே
Rate this:
elangovan - Chennai,இந்தியா
30-ஏப்-202118:54:04 IST Report Abuse
elangovanஉங்கள மாதிரி நிறைய பேர் இன்னும் இதத்தான் சொல்லிக்கிட்டே திரியராங்க....பீதியோட....”நமக்கு என்ன பயமா என்ன”....விட்ரா... விட்ரா....சூனா பானா... அப்டியே மெயிண்டன் பண்ணனும்...ஓகேவா.......
Rate this:
Cancel
rmr - chennai,இந்தியா
30-ஏப்-202116:43:35 IST Report Abuse
rmr திமுக வந்தா ஊழல் வளரும் கட்ட பஞ்சாயத்து வளரும் சன் குடும்பம் வளரும் சட்ட சீர்கேடு வளரும் ஏறி குளம் ஆக்கிரமிப்பு வளரும், இந்துக்களுக்கு கேட்ட காலம் வரும் இவர்களால் ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X