சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஏப் 29, 2021
Share
Advertisement
'ஏற்கனவே கொரோனா என்ற பூதம், நாட்டையே உலுக்கி வருகிறது. அதன் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் மக்கள் திணறுகையில், உங்களின் அரசியலுக்காக, மக்கள் கிளர்ச்சியும் வர வேண்டுமா; நல்ல எண்ணம். வாழ்க வளமுடன்...' என, சொல்லத் தோன்றும் வகையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அறிக்கை: நாட்டில் எங்கும் ஆக்சிஜன் பற்றாக்குறையோ, ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடோ, படுக்கைகள்


பேச்சு, பேட்டி, அறிக்கை

'ஏற்கனவே கொரோனா என்ற பூதம், நாட்டையே உலுக்கி வருகிறது. அதன் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் மக்கள் திணறுகையில், உங்களின் அரசியலுக்காக, மக்கள் கிளர்ச்சியும் வர வேண்டுமா; நல்ல எண்ணம். வாழ்க வளமுடன்...' என, சொல்லத் தோன்றும் வகையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அறிக்கை: நாட்டில் எங்கும் ஆக்சிஜன் பற்றாக்குறையோ, ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடோ, படுக்கைகள் கிடைக்காத நிலையோ இல்லை என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகிறார். அதுபோல, உ.பி., மாநில முதல்வரும் கூறுகிறார். இவர்களுக்கு எதிராக நாட்டு மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்.

'மொத்தத்தில், தேர்தல் வந்தது தான் சிக்கலுக்கு காரணம் என்பது நீங்கள் சொல்வதன் மூலம் புரிகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் ரவீந்திரநாத் பேட்டி: மாநிலங்களில் தேர்தல் வந்ததால், 'கொரோனாவை மத்திய அரசு கட்டுப்படுத்திவிட்டது' என்றனர். அதுபோல, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், 'இரண்டாவது அலை, மூன்றாவது அலை வராது' என்றெல்லாம் பிரசாரம் செய்தார். இதனால் மக்கள், முக கவசம் கூட அணியவில்லை; சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை. இதனால் தான் மீண்டும் கொரோனா இவ்வளவு தீவிரமாகப் பரவியிருக்கிறது.


'தடுப்பூசி பற்றி வதந்தி கிளப்பிய எதிர்க்கட்சியினர், அடுத்த சில நாட்களிலேயே போய், அந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டது தான் வினோதம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி:
எதிர்க்கட்சியினர் தான், தடுப்பூசி பற்றி வதந்தியைப் பரப்பினர் என்று சொல்வதே, ஆளுங்கட்சியினரின் இயலாமையை வெளிப்படுத்துகிறது. மக்களிடம் இயல்பாகவே தடுப்பூசி குறித்த ஒருவித அச்சம் நிலவி வந்தது. எனவே, எதிர்க்கட்சியினர் தான் வதந்திகளைப் பரப்பினர் என்பது அபத்தமான வாதம்.


'மருத்துவ கட்டமைப்பு இப்போது தான் அங்கு வலுப்படுத்தப்படுகிறது. இதற்கு முன், ஆட்சியில் இருந்த உங்களின் கூட்டணி கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்., போன்றவை அதை கண்டுகொள்ளவே இல்லையே...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை:
உ.பி., - பா.ஜ., ஆட்சியின் கையாலாகாத்தனம் பாரீர்! உயிருக்கும் உத்திரவாதம் இல்லை; பிணத்திற்கும் உரிய மரியாதை இல்லை. பாபர் மசூதி இடிப்பில் காட்டிய வேகத்தில், ஒரு சிறு பகுதியைக் கூட, மருத்துவ கட்டமைப்பில் காட்டவில்லை.


'இப்படித் தான், பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்; ஆனால், எதிரணியினர் நினைப்பு வேறு மாதிரி உள்ளதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., துணைத் தலைவர் அண்ணாமலை பேட்டி:
என் கருத்துப்படி, அ.தி.மு.க., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும். 20 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள, பா.ஜ., 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழையும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X