டில்லிக்கு இன்னும் தடுப்பூசிகள் வந்து சேரவில்லை: கெஜ்ரிவால்

Updated : ஏப் 30, 2021 | Added : ஏப் 30, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
புதுடில்லி: நாளை (மே 1) நாடு முழுவதும் 3வது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில், டில்லிக்கு இன்னும் தடுப்பூசிகள் வந்து சேரவில்லை என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி உள்ளன. நாளை (மே 1)
Delhi, ArvindKejriwal, Vaccine, Covid, CoronaVirus, டில்லி, முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால், தடுப்பூசி, தடுப்பு மருந்து, கொரோனா

புதுடில்லி: நாளை (மே 1) நாடு முழுவதும் 3வது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில், டில்லிக்கு இன்னும் தடுப்பூசிகள் வந்து சேரவில்லை என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி உள்ளன. நாளை (மே 1) முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், தங்களுக்கு இன்னும் தடுப்பூசிகள் வந்து சேரவில்லை என டில்லி அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது: டில்லிக்கு இன்னும் தடுப்பூசி வந்து சேரவில்லை. தடுப்பூசி நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளோம். நாளை (மே 1) அல்லது அதற்கு அடுத்த நாள் (மே 2) தடுப்பூசிகள் கிடைக்கும் என நம்புகிறோம்.


latest tamil news



கோவிஷீல்டு தடுப்பு மருந்து 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி அடுத்த இரு நாட்களுக்குள் வரும் என உறுதியளித்துள்ளனர். நாளை தடுப்பூசி போட்டுக்கொள்ள தடுப்பூசி மையங்களுக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசிகள் வந்தவுடன், அரசு தரப்பில் முறையான அறிவிப்பு வெளியிடுவோம். அதன்பிறகு, மையங்களுக்கு வந்து தகுதியுள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அடுத்த 3 மாதங்களில் இரு தடுப்பூசி நிறுவனங்களும் தலா 67 லட்சம் டோஸ் வழங்குமாறு கோரியுள்ளோம். டில்லி அரசு அதற்கான கட்டணத்தை செலுத்த தயாராக உள்ளது. டில்லி மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-மே-202108:43:23 IST Report Abuse
ஆப்பு லெஃப்டினண்ட் கெவுனருக்கு கடிதம் எழுதிருங்க கேஜ்ரி. இல்லேன்னா கவுத்துருவாங்க.இப்பிடித்தான் இங்கே கிரண்பேடி மூலமா நாராயணசாமிக்கு குடைச்சல் குடுத்து கவுத்தாங்க.
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
01-மே-202108:19:52 IST Report Abuse
rajan மோடிக்கு பிடிக்காதது உண்மை - உண்மை பேசினால் தேச துரோக வழக்கு
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
01-மே-202107:35:48 IST Report Abuse
அறவோன் நாளேடுகளில் இன்றும் இந்த செய்தி வந்திருக்கிறது - "Amid shortage, States postpone COVID-19 vaccine rollout for 18+"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X