தேர்தல் வெற்றியை வீட்டிற்குள் கொண்டாடுங்கள்: ஸ்டாலின் வேண்டுகோள்| Dinamalar

தேர்தல் வெற்றியை வீட்டிற்குள் கொண்டாடுங்கள்: ஸ்டாலின் வேண்டுகோள்

Updated : ஏப் 30, 2021 | Added : ஏப் 30, 2021 | கருத்துகள் (83) | |
சென்னை: தேர்தல் நிலவரங்களை வீட்டில் இருந்தே ஊடகங்கள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள் என்றும், வீட்டிற்குள் கொண்டாடுங்கள் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் (மே 2) வெளியாகவுள்ளது. இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டம் இன்று (ஏப்.,30) நடைபெற்றது. அதில் திமுக
DMK, Stalin, ElectionResults, Home, Celebration, Victory, திமுக, ஸ்டாலின், வெற்றி, கொண்டாட்டங்கள்,

சென்னை: தேர்தல் நிலவரங்களை வீட்டில் இருந்தே ஊடகங்கள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள் என்றும், வீட்டிற்குள் கொண்டாடுங்கள் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் (மே 2) வெளியாகவுள்ளது. இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டம் இன்று (ஏப்.,30) நடைபெற்றது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: கட்சியினரும், தொண்டர்களும் சட்டசபைத் தேர்தல் முடிவுகளை ஊடகங்கள் மூலமாக வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளுங்கள்.


latest tamil news



தேர்தலில் வெற்றி உறுதியானாலும் தேவையின்றி ஒன்றாகக் கூட வேண்டாம். தெருக்களில் வெற்றியை கொண்டாட வேண்டாம்; வீட்டிற்குள் கொண்டாடுங்கள். கொரோனாவால் தமிழகம் தவித்து வரும் நிலையில் பெருந்தொற்றிற்கு தொண்டர்கள் ஆளாகிவிட வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X