சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

கொண்டாட்டத்தை எப்படி தடுப்பது?

Added : ஏப் 30, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கொண்டாட்டத்தை எப்படி தடுப்பது?முனைவர்.மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ --- மெயில்' கடிதம்: கொரோனா அச்சுறுத்தலால், தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு, தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாம்.கடந்த மாதம், கட்சிகள் அனைத்தும், 'பரப்புரை' என்ற பெயரில், கொரோனா விதிமுறை எதையும் பின்பற்றாமல், வெள்ளமெனக் கூட்டம் கூட்டி, மாநிலம் முழுக்க


கொண்டாட்டத்தை எப்படி தடுப்பது?



முனைவர்.மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ --- மெயில்' கடிதம்: கொரோனா அச்சுறுத்தலால், தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு, தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாம்.
கடந்த மாதம், கட்சிகள் அனைத்தும், 'பரப்புரை' என்ற பெயரில், கொரோனா விதிமுறை எதையும் பின்பற்றாமல், வெள்ளமெனக் கூட்டம் கூட்டி, மாநிலம் முழுக்க கொரோனாவை பரப்பியதே... அப்போது தேர்தல் ஆணையம் துாங்கி கொண்டிருந்ததா?
அண்டை மாநிலங்களில் தீவிரமாய் தொற்று பரவுகிறது என்பதை அறிந்தும், தேர்தல் முடியட்டும் என, அலட்சியமாக இருந்த தேர்தல் ஆணையம் தான், இன்று இத்தனை பேர் பாதிக்கப்பட்டதற்கும், பல உயிர்கள் பலியானதற்கும் காரணம் என்றால் மிகையில்லை.
இதைத் தான், 'கொரோனா பரவும் என தெரிந்தே, தேர்தல் பிரசாரத்தை அனுமதித்தது, கொலைக்குச் சமம்' என்கிறது, நீதிமன்றம்; உண்மை தான்!
அரசியல் கட்சியின் தேர்தல் பிரசாரத்திற்கு கூடிய கூட்டத்தில், 90 சதவீதம் பேர், பாமர மக்கள். பணம் கொடுத்து, லாரிகளில் அழைத்து வரப்பட்ட
ஏழைகள். அவர்களுக்கு அப்போது தெரியாது, கொரோனா இரண்டாவது அலையும், அதன் தீவிரமும்.அரசியல்வாதிகள் கொடுத்த, 200 ரூபாய் பணத்துடன், விலை இல்லாமல் நோய் தொற்றையும் வாங்கியுள்ளோம் என்பது, அப்போதும் அவர்களுக்கு தெரியாது.
இது நடந்து முடிந்த கதை. இப்போது, தேர்தல் முடிவு வெளியாகப் போகிறது.நீதிமன்றத்தின் தலையீட்டால், தலைமை தேர்தல் ஆணையம், தேர்தல் கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் தடை, எந்த அளவுக்கு கட்சித் தொண்டர்களைக் கட்டுப்படுத்தும்?நாளை ஆட்சி அமைக்கப்போகும் அரசியல்வாதிகளுக்கு தான், அதிகாரிகள் பயப்படுவர். கொரோனா விதிமுறையை மீறும் அரசியல்வாதிகள் மீது, அவர்கள்
நடவடிக்கை எடுப்பரா?ஆட்சியைப் பிடித்த உற்சாகத்தில், சம்பந்தப்பட்ட கட்சியினர் கும்மாளத்தில் ஈடுபடுவர்; தோல்வி அடைந்தோர், அராஜகத்தில் இறங்குவர். இவற்றை எப்படி தடுப்பர்?
எல்லாம் டிஜிட்டல் மயமாகி விட்டது; இந்த ஓட்டு எண்ணிக்கையையும், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் கட்சியினர் கண்காணிக்க ஏற்பாடு செய்யக்
கூடாதா?


புதிய அரசுசமாளிக்குமா?



அரங்க.சேகர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு வழியாக, தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து, கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளியில், ஓட்டு எண்ணிக்கை, நாளை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் வெற்றிபெற்று, ஆட்சியை பிடிக்கும் கட்சிக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன.

* மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும்; தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும்

* ஊழலற்ற, நேர்மையான, திறமையான, வெளிப்படையான அரசு நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும்

* தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்

* மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு, மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்; நதி நீர் இணைப்பை செயல்படுத்த வேண்டும்

* வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க, ஆக்கப்பூர்வமான திட்டங்களை தீட்ட வேண்டும்

* இயற்கை வளங்களை பாதுகாக்க, அதற்கான சட்டங்களை இயற்ற வேண்டும்

* அரசின் நிதியை மேம்படுத்த, செலவினங்களை குறைத்து, வருவாயை அதிகப்படுத்தி, கடன் சுமையைக் குறைக்க வேண்டும்.இந்த சவால்களை எல்லாம் சமாளித்து, சாதனைகளாக மாற்றுமா, புதிய அரசு?


தடுப்பூசி தான்ஒரே ஆயுதம்!



பா.நாகலிங்கம், தாழக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா பரவல், காட்டாறு வெள்ளமென பரவி வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு, உயிரிழப்பும் உயர்ந்து வருகிறது.இப்போது, நம் கைவசம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும் தான். மருந்து தயாரிப்பு மற்றும் மக்களுக்கு தடுப்பூசி போடும் வேகத்தை, பன்மடங்கு கூட்ட
வேண்டும். ஒரு இடத்தில், மக்களை பெருமளவு கூட்டி, தடுப்பூசி போடும் வழிமுறையை மாற்ற வேண்டும். தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை, முன்கூட்டியே திட்டமிட்டு அதிகரிக்க வேண்டும்.வீடுகளுக்குச் சென்று, ஊசி போடும் முறையையும் அமல்படுத்தலாம். தடுப்பூசி கட்டாயம் என, அரசு அறிவிக்க வேண்டும்.கொரோனாவிடம் இருந்து, நம் நாட்டை காப்பாற்ற, தற்போதைக்கு வேறு வழியில்லை.


முதல்வருக்குபாராட்டுகள்!



வீ.ரா.கோபால், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டையே உலுக்கி வரும் கொரோனா இரண்டாம் அலை, பல மனித இன்னுயிர்களை பலி வாங்கி வருகிறது. கொரோனா நோயாளிகளின் உயிர் காக்க, ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பது, கவலைக்குரிய விஷயம்.பிரதமர் மோடி இதில் தலையிட்டு, விரைவாக ஆக்சிஜன் தயாரிக்க, 551 ஆலைகளுக்கு உடனடி அனுமதி அளித்துள்ளார். அதற்கான ஆரம்ப கட்ட பணிகள், துரித கதியில் நடந்து வருகின்றன.
மருத்துவமனைகளிலேயே, அதை நிர்மாணிக்க பணி நடப்பதால், ஆக்சிஜன் சிலிண்டர்களை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான கால விரயம் தவிர்க்கப்படும்.ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் தயாரிப்புக்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில், தமிழக அரசு, அனைத்து கட்சி கூட்டம் கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் மட்டும் தயாரிக்க சம்மதம் பெற்றது, மகிழ்ச்சி தரும் செய்தி. இதில் முதல்வர் இ.பி.எஸ்., எதிர்க்கட்சியினரை அரவணைத்து, ஒரு மனதாக முடிவு எடுக்க ஒத்துழைப்பு கோரியது, பாராட்டப்பட வேண்டிய செயல்.ஸ்டெர்லைட் ஆலையில், தகுந்த பாதுகாப்புடன், தாமிர உற்பத்தி செய்ய முடியும். எனவே, அரசியல் பகைமையை மறந்து, ஸ்டெர்லைட் ஆலையில், தாமிரம் உற்பத்தி செய்ய, கட்சியினர் அனுமதிக்க வேண்டும். இதனால், நம் நாட்டில், தாமிர தட்டுப்பாடு ஏற்படாது; வேலை வாய்ப்பு பெருகும்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
02-மே-202107:31:19 IST Report Abuse
venkat Iyer Dmk getting money
Rate this:
Cancel
Bharadwaj Narayanaswamy - Chennai,இந்தியா
01-மே-202112:19:11 IST Report Abuse
Bharadwaj Narayanaswamy அரசு முக கவசங்களை கடடாயமாக்க வேண்டும். மத விழாக்களை தடை செய்ய வேண்டும். கூட்டத்தை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் கிராமங்களிலும் கொரோனா பரவும். நிலைமை மிக மோசமாகும். இப்போதாவது அரசு கண்டு கொள்ளுமா?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-மே-202111:33:22 IST Report Abuse
D.Ambujavalli இப்போதே அங்கங்கு , 'நாமதான் வரப்போறோம் எங்கெங்கு நிலத்தை வளைத்துப் போடலாம் , மணல், கனிமம், ஜல்லி, மலை எதையெல்லாம் முழுங்கலாம் என்று கனவு காண ஆரம்பித்திருப்பார்கள் நேர்மையை, நியாயத்தை எண்ணியா பதவி ஏற்கப்போகிறார்கள் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X