பொது செய்தி

இந்தியா

'ரோஸ் வேலி' வழக்கு சொத்துக்கள் முடக்கம்

Added : ஏப் 30, 2021
Share
Advertisement
புதுடில்லி:பண மோசடி வழக்கில், 'ரோஸ் வேலி' குழுமத்திற்கு சொந்தமான, 304 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, அமலாக்க துறையினர் முடக்கி உள்ளனர்.மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் செயல்பட்டு வந்த ரோஸ் வேலி சீட்டு நிதி நிறுவனம், தன் முதலீட்டாளர்களிடம் இருந்து, போலி திட்டங்கள் வாயிலாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு

புதுடில்லி:பண மோசடி வழக்கில், 'ரோஸ் வேலி' குழுமத்திற்கு சொந்தமான, 304 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, அமலாக்க துறையினர் முடக்கி உள்ளனர்.

மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் செயல்பட்டு வந்த ரோஸ் வேலி சீட்டு நிதி நிறுவனம், தன் முதலீட்டாளர்களிடம் இருந்து, போலி திட்டங்கள் வாயிலாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியது. இதேபோல், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ், அமலாக்க துறையும் வழக்குப்பதிவு செய்து, இதை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில், ரோஸ் வேலி நிறுவனத்தின் தலைவர் கவுதம் குண்டு உட்பட பலர், ஏற்கனவே அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பணமோசடி வழக்கில், மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் ஒடிசாவில், ரோஸ் வேலி குழுமத்திற்கு சொந்தமான, 304 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X