பொது செய்தி

இந்தியா

நகையை விற்று இலவச சேவை; வியக்க வைத்த ஆட்டோ டிரைவர்

Updated : மே 01, 2021 | Added : ஏப் 30, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
போபால்:மத்திய பிரதேசத்தில், மனைவி நகையை விற்று, தன் ஆட்டோவை ஆம்புலன்ஸ் போல் மாற்றி, கொரோனா நோயாளிகளுக்கு இலவச சேவை அளித்து வரும் ஆட்டோ டிரைவரின் செயல், அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.மத்திய பிரதேசத்தில், கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல, ஆம்புலன்ஸ் சேவை எளிதில் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும், அதிக பணம் கேட்கப்படுவதால், ஏழை மக்களால், அதை
Free Auto, Oxygen, Jewel sale, நகை, இலவச சேவை , ஆட்டோ டிரைவர்

போபால்:மத்திய பிரதேசத்தில், மனைவி நகையை விற்று, தன் ஆட்டோவை ஆம்புலன்ஸ் போல் மாற்றி, கொரோனா நோயாளிகளுக்கு இலவச சேவை அளித்து வரும் ஆட்டோ டிரைவரின் செயல், அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

மத்திய பிரதேசத்தில், கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல, ஆம்புலன்ஸ் சேவை எளிதில் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும், அதிக பணம் கேட்கப்படுவதால், ஏழை மக்களால், அதை பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இவர்களது நலனை கருத்தில் வைத்து, போபாலைச் சேர்ந்த ஆட்டோ டிவைரர் ஜாவித் கான், தன் ஆட்டோவை ஆம்புலன்ஸ் வாகனம் போல் மாற்றியமைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை வழங்கி வருகிறார்.

அந்த ஆட்டோவில், நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டரும் பொருத்தப் பட்டு உள்ளது.ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஜாவித், தன் மனைவியின் நகையை விற்று, இந்த ஆட்டோவை மாற்றியமைத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BALU - HOSUR,இந்தியா
01-மே-202112:47:46 IST Report Abuse
BALU இருகரம் கூப்பி கைத்தொழுகிறோம் இந்த அற்புத தம்பதிகளை. இறைவன் இவருக்கு மிக அன்பான மணைவியைக் கொடுத்துள்ளான்.இவர்களைப் பெற்றெடுத்த பெரியோர்களையும் இருகரம் கூப்பித் தொழுகிறோம்.வாழையடி வாழையாக இவர்கள் குலம் செழிக்க இறைவனை வேண்டுகிறோம்.வாழ்க வளமுடன்.
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
01-மே-202112:13:39 IST Report Abuse
LAX பணமிருக்கும் மனிதனிடம் குணமிருப்பதில்லை.. குணமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை..
Rate this:
Cancel
nation first - MUMBAI,இந்தியா
01-மே-202109:09:59 IST Report Abuse
nation first ஒரு அற்புதமான மனிதர். வாழ்க வளமுடன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X