மாணவிக்கு தாலி கட்டியவர் 'போக்சோ' சட்டத்தில் கைது

Added : ஏப் 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
காரைக்கால்:மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் ஸ்டாலின் நகரைச் சேர்ந்தவர், மேக்சிம் ஜூன் பியரே, 27; சமையல் தொழிலாளி. இவருக்கு, பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. மேக்சிம் ஆசை வார்த்தை கூறி, கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். பின்,
 மாணவிக்கு தாலி கட்டியவர்  'போக்சோ' சட்டத்தில் கைது

காரைக்கால்:மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் ஸ்டாலின் நகரைச் சேர்ந்தவர், மேக்சிம் ஜூன் பியரே, 27; சமையல் தொழிலாளி. இவருக்கு, பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. மேக்சிம் ஆசை வார்த்தை கூறி, கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். பின், அலைபாயுதே படம் பாணியில், இருவரும் அவரவர் வீட்டில் வசித்து வந்தனர்.

மாணவியை அடிக்கடி தனிமையில் அழைத்து, மேக்சிம் பாலியல் தொந்தரவு கொடுத்தார். நேற்று முன்தினம், மாணவியின் கழுத்தில் இருந்த தாலியை பார்த்து, பெற்றோர் அதிர்ச்சி அடைந்து விசாரித்தனர். நடந்த விபரங்களை மாணவி கூறியுள்ளார்.மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த மேக்சிம் மீது, பெற்றோர், நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேக்சிம் மீது, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijay - coimbatore,இந்தியா
02-மே-202117:40:42 IST Report Abuse
vijay மேக்சிம் ஜூன் பியரே...கியாரே??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X