கள்ளக்காதலை கைவிட மறுப்பு மனைவியை கொன்ற கணவன் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்காதலை கைவிட மறுப்பு மனைவியை கொன்ற கணவன் கைது

Added : ஏப் 30, 2021 | கருத்துகள் (5)
Share
கிருஷ்ணகிரி:கள்ளக்காதலை கைவிட மறுத்ததால், மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கோவில் பூஜாரி கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, பாகலுாரைச் சேர்ந்தவர் சென்னபசப்பா, 44; பாகலுார் பைரவர் கோவில் பூஜாரி. இவரது மனைவி கவுரம்மா, 40. ஒரு மகன், மகள் உள்ளனர். சென்னபசப்பாவிற்கு உதவியாளராக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மிருத்தியன் ஜெயா, 23, என்பவர், சென்னபசப்பா வீட்டில்
 கள்ளக்காதலை கைவிட மறுப்பு மனைவியை கொன்ற கணவன் கைது

கிருஷ்ணகிரி:கள்ளக்காதலை கைவிட மறுத்ததால், மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கோவில் பூஜாரி கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, பாகலுாரைச் சேர்ந்தவர் சென்னபசப்பா, 44; பாகலுார் பைரவர் கோவில் பூஜாரி. இவரது மனைவி கவுரம்மா, 40. ஒரு மகன், மகள் உள்ளனர். சென்னபசப்பாவிற்கு உதவியாளராக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மிருத்தியன் ஜெயா, 23, என்பவர், சென்னபசப்பா வீட்டில் தங்கி, கோவில் பணி செய்து வந்தார்.கவுரம்மாவிற்கும், மிருத்தியன் ஜெயாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. சென்னபசப்பா, இருவரையும் கண்டித்தும், அவர்கள் கேட்கவில்லை.

நேற்று முன்தினம் மாலை, கவுரம்மா பிறந்த நாளை முன்னிட்டு, சென்னபசப்பா, மனைவியை வேப்பனஹள்ளி அடுத்த பசவேஸ்வரா கோவிலுக்கு அழைத்து சென்றார். அப்போது, கள்ளக் காதல் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், சென்னபசப்பா துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை நெரித்து, கத்தியால் கழுத்தை அறுத்துஉள்ளார். பின், கட்டையால் தலையில் அடித்து, கொலை செய்தார்.பின், ஓசூர் டவுன் போலீசில் சரணடைந்தார். வேப்பனஹள்ளி போலீசார், சென்னபசப்பாவை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X