சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கவரிங்' நகையை கொள்ளை அடிக்க 2 பெண்களை கொன்ற இருவர் கைது

Added : ஏப் 30, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை அருகே, 'கவரிங்' நகைக்காக, இரண்டு பெண்களை கொலை செய்த வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை, இந்திரா நகரைச் சேர்ந்த நாகராஜ் மனைவி கோகிலாமணி, 45. ஓய்வு பெற்ற எஸ்.ஐ., முத்தையா மனைவி கீர்த்தி, 35. இருவரும் கொலை செய்யப்பட்டு, அமராவதி பிரதான கால்வாயில் வீசப்பட்டனர்.கணியூர் போலீசார் விசாரித்து, ஜல்லிபட்டியைச் சேர்ந்த குழந்தைசாமி, 42,

உடுமலை:உடுமலை அருகே, 'கவரிங்' நகைக்காக, இரண்டு பெண்களை கொலை செய்த வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, இந்திரா நகரைச் சேர்ந்த நாகராஜ் மனைவி கோகிலாமணி, 45. ஓய்வு பெற்ற எஸ்.ஐ., முத்தையா மனைவி கீர்த்தி, 35. இருவரும் கொலை செய்யப்பட்டு, அமராவதி பிரதான கால்வாயில் வீசப்பட்டனர்.கணியூர் போலீசார் விசாரித்து, ஜல்லிபட்டியைச் சேர்ந்த குழந்தைசாமி, 42, பழநி, கள்ளிமந்தையத்தைச் சேர்ந்த குமார், 42, ஆகியோரை கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:கீர்த்திக்கும், குழந்தைசாமிக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்துள்ளது. நாளடைவில், தன் தோழியான, கோகிலாமணியுடனும் அறிமுகப்படுத்தி வைத்து உள்ளார். இரு பெண்களும் அணிந்திருந்த நகை, அவர்களது ஆடம்பரம் ஆகியவற்றை கவனித்த குழந்தைசாமி, அவர்களை கொலை செய்து, பணம், நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டு, தன் நண்பரான குமாரையும் சேர்த்துள்ளார்.

கடந்த, 26ம் தேதி இரவு, 8:00 மணியளவில், குழந்தைசாமி, குமார் மற்றும் கீர்த்தி ஆகியோர், கோகிலாமணி வீட்டிற்கு சென்றுள்ளனர். பின், இருவரும் சேர்ந்து, இரு பெண்களின், கழுத்தை நெரித்தும், துண்டால் இறுக்கியும் கொலை செய்து, போர்வையால் கட்டியுள்ளனர். பின், தாங்கள் வந்த சரக்கு ஜீப்பில் சடலங்களை ஏற்றி, தாராபுரம் ரோடு, துங்காவி அருகிலுள்ள அமராவதி பிரதான கால்வாயில் வீசிச் சென்றுள்ளனர். இரு பெண்களிடமும் பறித்த செயின், வளையல், மோதிரம், தோடு ஆகியவற்றை பழநியில் அடகு வைக்கச் சென்றபோது, அனைத்தும், 'கவரிங்' என தெரிந்துள்ளது. இருவரையும் கைது செய்துள்ளோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X