சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

புற்றுநோயிலிருந்து மீளலாம்; நானே உதாரணம்!

Added : ஏப் 30, 2021
Share
Advertisement
சிறுவயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டதால், அதிலிருந்து மீண்டு, நடனத்தில் பல சாதனைகள் படைத்து வருவது பற்றி, 12 வயது சென்னை சிறுமி அபிராமி: எனக்கு, 1 வயதாக இருக்கும் போது, மூச்சு பிரச்னை இருந்தது. டாக்டர்களிடம் என்னை துாக்கிச் சென்று என் பெற்றோர் காட்டிய போது தான், புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்,
சொல்கிறார்கள்:

சிறுவயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டதால், அதிலிருந்து மீண்டு, நடனத்தில் பல சாதனைகள் படைத்து வருவது பற்றி, 12 வயது சென்னை சிறுமி அபிராமி: எனக்கு, 1 வயதாக இருக்கும் போது, மூச்சு பிரச்னை இருந்தது. டாக்டர்களிடம் என்னை துாக்கிச் சென்று என் பெற்றோர் காட்டிய போது தான், புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், எனக்கு தீவிர சிகிச்சை அளிப்பது என முடிவு செய்து, ஐந்தாண்டுகள் இடைவிடாது சிகிச்சை அளித்து, ஐந்தாண்டுகளுக்கு முன், பூரணமாக அந்த பிரச்னையிலிருந்து வெளியே வந்து விட்டேன். அந்த வயதில் நோயிலிருந்து மீண்டாலும், உடல் அளவில் மிகவும் வலுவற்று இருந்தேன். அப்போது ஒரு நாள் கோவிலுக்கு சென்ற போது, அங்கு நடந்த பரத நாட்டிய நிகழ்ச்சி என்னை வெகுவாக ஈர்த்தது. நாமும் பரதம் படிக்க வேண்டும் என விரும்பி, அங்கிருந்த நாட்டிய பள்ளி ஆசிரியையிடம் விசாரித்தேன். அவர் எனக்கு கற்றுத் தர முன்வந்தார்.மேலும், 'யுனிக் வேல்ர்ட் ரெக்கார்டு' பற்றி கூறி, நடனத்தில் சாதனை படைக்கலாம் என, அந்த நடன ஆசிரியை எனக்கு உற்சாகம் ஊட்டினார். அதனால் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு, உடலை வலுப்படுத்திய பின், 2018ல், அரை மணி நேரம் மண் பானை மீது நின்றபடி நடனமாடி, 'யுனிக் வேல்ர்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனை படைத்தேன்.அதற்கு பின், 2020ல், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும், 24 கத்திகள் மீது நின்றபடி, நடனமாடி, 'கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனைக்கு தேர்வானேன்.

இதற்காக ஓராண்டு பயிற்சி எடுத்தேன்.இதுபோல, நாட்டியத்தில் பல சாதனைகள் புரிந்துள்ளதால், தனியார் பல்கலை ஒன்று எனக்கு, நடனத்தில் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அடுத்து, கின்னஸ் சாதனையை நடனத்தில் படைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.இத்துடன் நின்று விடாமல், ஓய்வு கிடைக்கும் நேரங்களில், குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆறுதல் கூறி வருவதை கடமையாக செய்கிறேன். முறைப்படி சிகிச்சை பெற்றால், என்னைப் போல இந்த பிரச்னையிலிருந்து மீண்டு விடலாம் என என்னைக் காட்டி, குழந்தைகளின் பெற்றோருக்கு ஊக்கமூட்டி வருகிறேன்.புற்றுநோயிலிருந்தும் மீளலாம் என்பதற்கு பலர் உதாரணமாக உள்ள நிலையில், நானும் என்னால் ஆன சமுதாய பங்கை ஆற்றி வருகிறேன். புற்றுநோயிலிருந்து மீண்ட தகுதி உடையோருக்கு, வேலைவாய்ப்பில் சலுகை வழங்கினால், என்னைப் போன்ற ஏராளமானோர், நோய்க்கு பின் நல்ல வாழ்க்கை வாழ்வர் என்பதில் ஐயமில்லை!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X