பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி.பி., வனத்தில் பூத்தது செண்பகப்பூ விவேக் துவங்கிய பூங்காவில் நெகிழ்ச்சி

Added : மே 01, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கோவை:மறைந்த பாடகர் எஸ்.பி.பி., நினைவாக, கோவையில், நடிகர் விவேக் துவக்கி வைத்த, எஸ்.பி.பி., வனம் பூங்காவில் நடப்பட்ட மரக்கன்றுகள், நான்கு மாதங்களில் நன்கு வளர்ந்து, துளிர்த்துள்ளன.மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவாக, 'சிறுதுளி' அமைப்பு மற்றும் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி இணைந்து, கோவை பச்சாபாளையம் ஆபீசர்ஸ் காலனி வளாகத்தில், எஸ்.பி.பி., வனம் உருவாக்கின. அவரது வயதை
 எஸ்.பி.பி., வனத்தில் பூத்தது செண்பகப்பூ விவேக் துவங்கிய பூங்காவில் நெகிழ்ச்சி

கோவை:மறைந்த பாடகர் எஸ்.பி.பி., நினைவாக, கோவையில், நடிகர் விவேக் துவக்கி வைத்த, எஸ்.பி.பி., வனம் பூங்காவில் நடப்பட்ட மரக்கன்றுகள், நான்கு மாதங்களில் நன்கு வளர்ந்து, துளிர்த்துள்ளன.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவாக, 'சிறுதுளி' அமைப்பு மற்றும் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி இணைந்து, கோவை பச்சாபாளையம் ஆபீசர்ஸ் காலனி வளாகத்தில், எஸ்.பி.பி., வனம் உருவாக்கின. அவரது வயதை குறிப்பிடும் வகையில், 74 மரக்கன்றுகள், இசை குறியீடு வகையில் நடப்பட்டன. மிக முக்கியமாக, இசை கருவிகள் தயாரிக்க பயன்படுத்தும் மரங்களின் வகைகள் மற்றும் ஸ்தல விருட்ச மரக்கன்றுகள் மட்டுமே நடப்பட்டன.

சமீபத்தில் மறைந்த நடிகர் விவேக், இவ்விழாவில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று, மரக் கன்றுகள் நட்டதோடு, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, மக்கள் மத்தியில் வலியுறுத்தினார்.அவர் துவக்கி வைத்த, எஸ்.பி.பி., வனம் பூங்காவில் நடப்பட்ட மரக்கன்றுகள், நான்கு மாதங்களில் நன்கு வளர்ந்து, ஆரோக்கியமாக இலைகள் துளிர்க்க ஆரம்பித்துள்ளன.
வழக்கமாக, செண்பகப்பூ, செப்டம்பர் மாதங்களில் பூக்கும். ஆனால், மரக்கன்று நட்ட, நான்கே மாதத்தில், விவேக் மறைந்த மூன்றாவது நாளில், செண்பகப்பூ மலர்ந்தது. இது, அப்பகுதி மக்களிடமும், 'சிறுதுளி' அமைப்பினரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறுகையில், ''இந்த வனத்தை உருவாக்கிய நிகழ்வில் பங்கேற்க, நடிகர் விவேக் விருப்பப்பட்டார். செண்பகம் மற்றும் புன்னை மரங்களை நட்டு, விழாவை துவக்கி வைத்தார்.''நான்கே மாதங்களில், ஆரோக்கியமாக நன்கு வளர்ச்சி அடைந்திருப்பதோடு, பூ பூத்தது நெகிழ்ச்சி அடைய வைத்தது. இது, ஆத்மார்த்த வனம்; அந்தளவுக்கு உயிரோட்டமாக இருக்கிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
01-மே-202119:53:45 IST Report Abuse
r.sundaram பூங்காவை நன்றாக பராமரித்து வாருங்கள். மழை வளம் பெறுக வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
S.K. Praba - Madurai,இந்தியா
01-மே-202114:39:45 IST Report Abuse
S.K. Praba ஒரு புனிதம், ஒரு ஆத்மார்த்தம். எஸ்.பி.பி., வனத்தில், விவேக் நட்ட மரத்தில் செண்பக பூ.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
01-மே-202108:44:34 IST Report Abuse
Girija அவர்கள் தொழிலை அவர்கள் செய்தார்கள், கோடிஸ்வரர்கள். ஏதோ சுதந்திர போராட்ட தியாகிகள் போல எதற்கு இது போல் பீல்ட் அப் ? ஊடகங்கள் கொஞ்சம் ஓவராகத்தான் போகிறது . கொரோனா செய்திகள் தான் தொலைக்காட்சிகளில் சரிக்கு பாதி மீதி விளம்பரம் . இது போல் உண்மையாக நேர்மையாக உழைத்த அரசு அலுவலர்கள்க்கு / தனியார் அலுவலர்களுக்கு . எந்த ஒரு குற்ற பதிவும் இல்லாதவருக்கு ஒரு பாராட்டு உண்டா ? ஆனால் வங்கி கடனுக்கு கிரெடிட் ரேட்டிங் உள்ளது இதுதான் இந்தியா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X