தடுப்பூசி பற்றாக்குறை? சுகாதார துறை மறுப்பு

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மாநில அரசுகள் கூறி வரும் நிலையில் மத்திய சுகாதார துறை அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.நம் நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன. எனினும் 'போதிய தடுப்பூசிகள் கையிருப்பில்
Vaccine, Corona Vaccine, Covid Vaccine

புதுடில்லி: கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மாநில அரசுகள் கூறி வரும் நிலையில் மத்திய சுகாதார துறை அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன. எனினும் 'போதிய தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால் 18 - 44 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்படாது' என சில மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த தடுப்பூசி பற்றாக்குறை புகாரை மத்திய அரசு நிராகரித்துள்ளது.


latest tamil news


இது குறித்து மத்திய சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படவில்லை. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்கள் இன்னும் கைவசம் உள்ளன. அடுத்த மூன்று நாட்களில் கூடுதலாக 20 லட்சம் டோஸ்கள் அவர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
01-மே-202119:12:12 IST Report Abuse
 rajan தடுப்பூசி பற்றாக்குறை என்பதை அரசு மறுக்கக்கூடாது. எனக்கு Covaccin இரண்டாவது Dose 26/4 போடப்படவேண்டும். ஆனால் இன்றுவரை ஸ்டாக் இல்லை என்று சொல்கிறார்கள் எப்போது வரும் என்று தெரியாது என்கிறார்கள். தனியார் மருத்துவமனையிலும் கேட்டதற்கு பெயர் கொடுத்து விட்டு செல்லுங்கள் தடுப்பூசி வந்ததும் தெரியப்படுத்துகிறோம் என்கிறார்கள். இதுதான் உண்மை. இப்படி இருக்கையில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
01-மே-202116:16:15 IST Report Abuse
vnatarajan இதற்கு தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்று கூறும் மாநிலங்கள் என்ன சொல்லுகிறார்கள்
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
01-மே-202112:23:08 IST Report Abuse
Sridhar ஏன் இந்த குழப்பம்? உண்மையாலுமே இருப்பு இருக்கும் பட்சத்தில், மத்திய அரசு, அனுப்பியது எவ்வளவு, அதில் இதுவரை மாநிலங்களால் பயன்படுத்தப்பட்டது அல்லது வீணடிக்கப்பட்டது எவ்வளவு, மீதம் மாநில வாரியாக எவ்வளவு ஸ்டாக் இருக்கவேண்டும் என தெளிவாக கூறவேண்டியதுதானே? இவ்வளவு முக்கியமான விஷயத்தில் ஏன் இந்த சின்னபிள்ளைத்தனம்? இதில் மற்றுமொரு அபாயம் என்னவென்றால், திருடர்கள் நிறைய இருக்கும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், கணக்கில் குளறுபடி செய்து வாக்சினை கருப்பு சந்தையில் விற்றுவிடுவார்கள். ஏன், வெளிநாட்டுக்கே அனுப்பினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆகவே, மத்திய அரசு சுகாதார துறை உஷாராக வாக்சிங் கணக்கை துல்லியமாக கொடுக்கவேண்டியது மிகவும் அவசியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X