423 பேருக்கு கொரோனா 268 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

423 பேருக்கு கொரோனா 268 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : மே 01, 2021
Share
திருப்பூர் - திருப்பூர் மாவட்டத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, 300ஐ கடந்ததால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நேற்று, 3 ஆயிரத்தை கடந்தது.மாவட்டத்தில் நேற்று, 423 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 268 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். கோவையில் சிகிச்சை பெற்று வந்த, 38 வயது பெண் ஒருவர் தொற்றுக்கு பலியாகினார்.நேற்றைய நிலவரப்படி மாவட்டத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 26

திருப்பூர் - திருப்பூர் மாவட்டத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, 300ஐ கடந்ததால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நேற்று, 3 ஆயிரத்தை கடந்தது.மாவட்டத்தில் நேற்று, 423 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 268 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். கோவையில் சிகிச்சை பெற்று வந்த, 38 வயது பெண் ஒருவர் தொற்றுக்கு பலியாகினார்.நேற்றைய நிலவரப்படி மாவட்டத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 26 ஆயிரத்து, 409. இதுவரை, 23 ஆயிரத்து, 138 பேர் தொற்று குணமடைந்துள்ளனர். தொற்றுக்கு, 238 பேர் இறந்த நிலையில் நேற்று இறந்த பெண்ணுடன் சேர்த்து இறப்பு, 239 ஆக உயர்ந்தது.கடந்த நான்கு நாட்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு, 300ஐ தாண்டி பதிவு ஆவதால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. பத்து நாட்களுக்கு முன், 1,500க்கு கீழ் இருந்த இந்த எண்ணிக்கை நேற்று, 3 ஆயிரத்தை தாண்டியது.கோவை, திருப்பூர், ஈரோட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனையில், 3,032 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X