சம்பவம் செய்தி

தமிழ்நாடு

120 சவரன் நகை கொள்ளை 2 பேரை கைது செய்த போலீஸ்

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்பூர் - திருப்பூரில், 120 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், கே.செட்டிபாளையம், மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் சபியுல்லா, 53. பனியன் பிரின்டிங் நிறுவன உரிமையாளர்.அவர் தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சென்ற போது, 4ம் தேதி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், இரண்டு பீரோவில் இருந்த, 120 சவரன் நகை, 27 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து

திருப்பூர் - திருப்பூரில், 120 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், கே.செட்டிபாளையம், மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் சபியுல்லா, 53. பனியன் பிரின்டிங் நிறுவன உரிமையாளர்.அவர் தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சென்ற போது, 4ம் தேதி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், இரண்டு பீரோவில் இருந்த, 120 சவரன் நகை, 27 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.மூன்று தனிப்படை அமைத்து, வீரபாண்டி போலீசார் விசாரித்தனர்.அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பரத், 32, சத்தியமங்கலத்தை சேர்ந்த அப்துல் ஹக்கீம், 33 ஆகியோரை கைது செய்து, ரூ.10 லட்சம், பத்து சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறியதாவது:கடந்த ஒரு மாதத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த குற்ற வழக்கில் தொடர்புடையவர் விபரம் குறித்து விசாரித்தோம். கைது செய்யப்பட்ட இருவரும் பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்பு இருந்தது தெரிந்தது. சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள், சபியுல்லா வீட்டில் கொள்ளையடித்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகிறோம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X