பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி செயலருக்கு பணிச்சுமை மற்ற துறையினருக்கு வழங்கலாமே!

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்பூர் - ஊராட்சி செயலர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், இதர அரசு துறைகளில் பணிபுரிவோரையும் பணியில் ஈடுபடுத்தலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், ஊராட்சிகளில், குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம், வரி வசூல் போன்ற பணிகளுடன் அரசு திட்டப்பணிகளையும், ஊராட்சி செயலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.ஊராட்சி செயலர்கள் கூறியதாவது: கொரோனா பரவல்

திருப்பூர் - ஊராட்சி செயலர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், இதர அரசு துறைகளில் பணிபுரிவோரையும் பணியில் ஈடுபடுத்தலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், ஊராட்சிகளில், குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம், வரி வசூல் போன்ற பணிகளுடன் அரசு திட்டப்பணிகளையும், ஊராட்சி செயலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.ஊராட்சி செயலர்கள் கூறியதாவது: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், கிராமங்களில், சுகாதாரப்பணிகள், ஊராட்சி செயலர்களின் மேற்பார்வையில் நடக்கிறது.வீடு வீடாக சென்று, காய்ச்சல் உள்பட தொற்று அறிகுறிகளுடன் மக்கள் உள்ளனரா என்பதையும் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பொதுமக்களை கொரோனா பரிசோதனைக்கு அழைத்து செல்லுதல், வெளியூரில் இருந்து வருவோரை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.இதனால், ஊராட்சி செயலர்களின் பணிச்சுமை கூடியுள்ளது. எங்களுக்கு உதவியாக, இதர அரசுத்துறைகளில் பணிபுரிவோரை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும்; மேலும், செயலர்களுக்கு, கூடுதல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X