சிறப்பு வார்டு அமைக்க தாமதம் கொரோனா நோயாளிகள் தவிப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
பல்லடம் - பல்லடத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைப்பதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால் கொரோனா நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.பல்லடம் வட்டாரத்தில், 200க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையிலுள்ள, 20 படுக்கைகளிலும் நோயாளிகள் உள்ள சூழலில், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர், கோவை மற்றும் அவிநாசியில் உள்ள சிறப்பு வார்டுக்கு பரிந்துரை

பல்லடம் - பல்லடத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைப்பதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால் கொரோனா நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.பல்லடம் வட்டாரத்தில், 200க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையிலுள்ள, 20 படுக்கைகளிலும் நோயாளிகள் உள்ள சூழலில், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர், கோவை மற்றும் அவிநாசியில் உள்ள சிறப்பு வார்டுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.பல்லடத்தில் தினசரி, ஐந்து முதல் - 10 பேர் வரை நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவமனைகளில் இடமில்லாததால், சிகிச்சைக்காக திருப்பூர், கோவை செல்வதா, என்று குழப்பம் அடைகின்றனர்.பல்லடத்தில் சிறப்பு வார்டு அமைக்க, அரசு கல்லுாரியின் புதிய கட்டடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது.பல்லடத்தில் சிறப்பு வார்டு அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தொழிலாளர்நிறைந்த பல்லடம் பகுதியில், தொற்று பரவல் அதிகரிப்பதற்குள் சிறப்பு வார்டுகள் அமைத்து, சிகிச்சைகளை தீவிரப்படுத்த வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X