பொது செய்தி

தமிழ்நாடு

தபால் நிலையங்களில் ஆதார் பணிகள் நிறுத்தம்; தொற்று பரவும் அபாயத்தால் அரசு நடவடிக்கை

Added : மே 01, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்; கொரோனா பரவல் காரணமாக, தபால் நிலையங்களில், திருத்தம் மேற்கொள்வது உள்ளிட்ட ஆதார் தொடர்பான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.நாடு முழுவதும், தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அடிக்கடி சோப்பால் கையை கழுவுதல் உள்ளிட்ட அறிவுரைகளை,

பெ.நா.பாளையம்; கொரோனா பரவல் காரணமாக, தபால் நிலையங்களில், திருத்தம் மேற்கொள்வது உள்ளிட்ட ஆதார் தொடர்பான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.நாடு முழுவதும், தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அடிக்கடி சோப்பால் கையை கழுவுதல் உள்ளிட்ட அறிவுரைகளை, கண்டிப்பாக பின்பற்றுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.முகக்கவசம் அணியாமல், பொதுவெளியில் நடமாடும் நபர்களுக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. வைரஸ் தொற்று எவ்வாறு பரவுகிறது என்பதை கூர்ந்து கவனித்து, அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அரசு முனைப்பு காட்டுகிறது. கடந்த ஆண்டு முதல், அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.மேலும், ஆதார் கார்டு பெறுவது தொடர்பான பணிகளுக்கு, பயோமெட்ரிக் பயன்படுத்தப்பட்டு வந்தது. தபால் நிலையங்களில் ஆதார் பதிவு, ஆதார் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தன.தினமும் ஏராளமான பொதுமக்கள், தங்களுடைய ஆதார் கார்டில் திருத்தம் மற்றும் புதிய ஆதார் அட்டைகளை பெற்று வந்தனர். இவர்கள் அனைவரும் பயோமெட்ரிக் பயன்படுத்தி வந்ததால், ஊழியர்கள் உட்பட பொது மக்களுக்கும் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக புகார் எழுந்தது.தபால் நிலையங்களில் ஆதார் தொடர்பான பணிகளை நிறுத்தி வைக்க, மத்திய அரசு உத்தரவிட வேண்டுமென தபால் ஊழியர்கள் சார்பில், கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக தபால் நிலையங்களில், மேற்கொள்ளப்பட்டு வந்த ஆதார் திருத்தம், ஆதார் பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளை மறு உத்தரவு வரும் வரை, நிறுத்தி வைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தபால் நிலைய அதிகாரிகள் கூறுகையில்,'கடந்த ஒரு வாரமாக ஆதார் கார்டு திருத்தம் பதிவு உள்ளிட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை, தபால் நிலையங்களில், இது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படாது' என்றனர்.கோவை வடக்கு பகுதியில் பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், வட மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் ஆதார் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அவை தற்போது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.ரேஷன் கடை பயோமெட்ரிக் ரத்தாகுமா?ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் தொற்று பாதித்து விடுமோ என்ற அச்சத்தால், கடைகளுக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.தேர்தலின்போது, பிளாஸ்டிக் கையுறை அணிந்து, ஓட்டளித்தோம். ஆனால், ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்து, உணவுப் பொருட்களை வாங்குகிறோம். இதனால், நோய் பரவும் அபாயம் உள்ளது. இதற்கு அரசு, மாற்று ஏற்பாடுகளை செய்ய முன் வரவேண்டும், என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X