பொது செய்தி

தமிழ்நாடு

போதிய விலை இல்லை... செடியில் அழுகும் தக்காளி

Added : மே 01, 2021
Share
Advertisement
சூலுார்,--தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருவதால், அவற்றை பறிக்காமல், கால்நடைகளுக்கு தீவனமாக, வயலிலேயே விவசாயிகள் விட்டுவிட்டனர்.சூலுார் வட்டாரத்தில் மேற்கு பகுதிகளில் தக்காளி, வெண்டை, கத்தரி மற்றும் பீர்க்கன் உள்ளிட்ட கொடி வகை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.கிலோ, 10 ரூபாய்க்கும் கீழே

சூலுார்,--தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருவதால், அவற்றை பறிக்காமல், கால்நடைகளுக்கு தீவனமாக, வயலிலேயே விவசாயிகள் விட்டுவிட்டனர்.சூலுார் வட்டாரத்தில் மேற்கு பகுதிகளில் தக்காளி, வெண்டை, கத்தரி மற்றும் பீர்க்கன் உள்ளிட்ட கொடி வகை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.கிலோ, 10 ரூபாய்க்கும் கீழே சென்றுவிட்டது. தோட்டத்தில் 5 ரூபாய்க்கும் எடுக்க ஆளில்லை. இதனால், தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் விரக்தியடைந்தனர். சில விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடிகளிலேயே விட்டு விட்டனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,' தக்காளி விலை இறங்குமுகமாகவே உள்ளது. தக்காளி பறிப்பதற்கான கூலிகூட கட்டுபடியாவதில்லை. அந்த அளவுக்கு விலை குறைந்துவிட்டது. அதனால், கால்நடைகளுக்கு தீவனமாகட்டும் என்று தக்காளியை பறிக்காமல் செடிகளிலேயே விட்டு விட்டோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X