பொது செய்தி

தமிழ்நாடு

கெண்டையூர் சாலையை சீரமைக்க கோரிக்கை

Added : மே 01, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் -பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட ரோடு, பணி முடிந்து ஓராண்டாகியும் சீரமைக்கப்படவில்லை. உடனடியாக, சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லையில், கெண்டையூர் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு கெண்டையூரில், ராமேகவுண்டன்புதூர் செல்லும் சாலையின் நடுவே, குழிதோண்டி பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டது. அதன் பிறகு

மேட்டுப்பாளையம் -பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட ரோடு, பணி முடிந்து ஓராண்டாகியும் சீரமைக்கப்படவில்லை. உடனடியாக, சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லையில், கெண்டையூர் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு கெண்டையூரில், ராமேகவுண்டன்புதூர் செல்லும் சாலையின் நடுவே, குழிதோண்டி பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டது. அதன் பிறகு இன்றுவரை அப்பகுதியில், தார் போடாமல் அப்படியே விட்டு விட்டனர்.இதனால் சாலையின் நடுவே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் கெண்டையூர், ராமேகவுண்டன்புதூர், ஈ.பி., காலனி ஆகிய ஊர்களுக்கு, இரவில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பலர் விபத்துக்கு உள்ளாகின்றனர்.அடிக்கடி இப்பகுதியில் விபத்துகள் நடைபெறுவதால், சாலையை சீரமைக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து கெண்டையூர் மக்கள் கூறுகையில், 'கெண்டையூர் பகுதியில், பாதாள சாக்கடை குழாய் பதித்து, ஓராண்டாகியும், இன்னும் தார் சாலை அமைக்கவில்லை. இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மழைகாலத்தில் சாலை முழுவதும், சேறும், சகதியுமாக உள்ளது. எனவே, உடனடியாக இச்சாலைக்கு தார் போட வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X