பொது செய்தி

தமிழ்நாடு

வறட்சியால் காயும் தென்னை வேறு பயிருக்கு மாறும் விவசாயிகள்

Added : மே 01, 2021
Share
Advertisement
சூலுார்; வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்து வருவதால், மாற்று பயிரை பயிரிட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. பல லட்சம் தென்னை மரங்கள் இப்பகுதியில் உள்ளன. உற்பத்தியாகும் தேங்காய்கள் மற்றும் இளநீர் பல மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. தேங்காய்கள் மூலம் கிடைக்கும் கொப்பரைகளும் பல இடங்களுக்கு

சூலுார்; வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்து வருவதால், மாற்று பயிரை பயிரிட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. பல லட்சம் தென்னை மரங்கள் இப்பகுதியில் உள்ளன. உற்பத்தியாகும் தேங்காய்கள் மற்றும் இளநீர் பல மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. தேங்காய்கள் மூலம் கிடைக்கும் கொப்பரைகளும் பல இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. தென்னைக்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால், வறட்சியின் பிடியில் தென்னை விவசாயம் சிக்கியது. பல பகுதிகளில் தென்னை மரங்கள் காய்ந்தன. எனவே, சில விவசாயிகள் மாற்றுப் பயிர்களை பயிரிட முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகிறோம். மழை இல்லாததால், மரங்கள் காய்ந்துவிட்டன. அவற்றை அகற்றி விட்டு, இருக்கும் தண்ணீரை கொண்டு, மண்ணின் தரத்துக்கு ஏற்ப மாற்றுப் பயிர்களை பயிரிட முடிவு செய்துள்ளோம். வெண்டை, தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறி பயிர்களை பயிரிடலாம் என்ற முடிவில் இருக்கிறோம்.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X