சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 78 பேருக்கு தொற்று: அன்னூரில் ஒருவர் பலி

Added : மே 01, 2021
Share
Advertisement
அன்னுார்; அன்னுார், எஸ்.எஸ். குளம் வட்டாரங்களில், நேற்று ஒரே நாளில், 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அன்னுார் பேரூராட்சியில், குமரன் நகர், அன்பு நகர், மெயின் ரோடு, திலகர் வீதி, குமாரபாளையம் ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கு தற்று உறுதியானது. அங்கு பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியமூர்த்தி தலைமையில், ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து, பிளீச்சிங் பவுடர்

அன்னுார்; அன்னுார், எஸ்.எஸ். குளம் வட்டாரங்களில், நேற்று ஒரே நாளில், 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அன்னுார் பேரூராட்சியில், குமரன் நகர், அன்பு நகர், மெயின் ரோடு, திலகர் வீதி, குமாரபாளையம் ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கு தற்று உறுதியானது. அங்கு பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியமூர்த்தி தலைமையில், ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து, பிளீச்சிங் பவுடர் துாவினர்.கிராமப்பகுதியில் மசக் கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் 8, பிள்ளையப்பம்பாளையத்தில் 5, குன்னத்துார், பசூர், காட்டம்பட்டியில் தலா 3, பச்சாபாளையம், கரியாம் பாளையம், அ.மேட்டுபாளையம் ஊராட்சிகளில் தலா இருவர் உள்பட 12 ஊராட்சிகளில் 37 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.கடந்த நான்கு மாதங்களில், அன்னுார் ஒன்றியத்தில் நேற்றுதான் அதிகபட்சமாக தொற்று உறுதியாகி உள்ளது. பொகலுார் ஊராட்சியில், நேற்று முன்தினம் 65 வயது முதியவர் கொரோனாவில் இறந்ததை அடுத்து, துப்புரவு பணியாளர்கள் சரவணா நகர், ஏ.டி. காலனி உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளித்து, பிளீச்சிங் பவுடர் துாவினர்.மசக்கவுண்டன் செட்டி பாளையம் ஊராட்சியில் தொற்று அதிகரித்துள்ளதால், அந்த ஊராட்சியில்தூய்மைப் பணியை தீவிரப் படுத்த ஒன்றிய அதிகாரிகள் அறிவுறுத்தினர். அன்னுார் வட்டாரத்தில்தினமும் 10 பேருக்கு தொற்று உறுதியாகி வந்த நிலையில், சில நாட்களாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கோவில்பாளையம்சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தில், வெள்ளானைப்பட்டி, கோவில்பாளையம்,குரும்பபாளையம்,கொண்டையம்பாளையம், கீரணத்தம் உள்ளிட்ட ஊர்களில் நேற்று, 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.கடந்த ஒரு மாதத்தில் இதுவே அதிகபட்ச ஒருநாள் தொற்று எண்ணிக்கை ஆகும். இதையடுத்து, தொற்று உறுதியான வீடுகள் அமைந்துள்ள பகுதியில் கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல், நடமாட்டம் தடை செய்தல் உள்ளிட்ட பணிகளை ஊராட்சி நிர்வாகிகள் செய்தனர்.'தொற்று உறுதியானவர்கள் உடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை விரைவில் நடத்தப்படும்' என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X