பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலில் அனுமதி இல்லை வெளியே நின்று வழிபாடு

Added : மே 01, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்; வழிபாட்டுத்தலங்களில், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்பதால், அவை மூடப்பட்டுள்ளன. எனினும், வனபத்ரகாளியம்மன் கோவிலில், பக்தர்கள், நுழைவாயிலில் நின்று நேர்த்திக் கடன் செலுத்திச் செல்கின்றனர்.கொரோனா தொற்று பரவலை குறைக்க, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி மறுத்து, தமிழக அரசு அறிவித்துள்ளது.மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன்

மேட்டுப்பாளையம்; வழிபாட்டுத்தலங்களில், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்பதால், அவை மூடப்பட்டுள்ளன. எனினும், வனபத்ரகாளியம்மன் கோவிலில், பக்தர்கள், நுழைவாயிலில் நின்று நேர்த்திக் கடன் செலுத்திச் செல்கின்றனர்.கொரோனா தொற்று பரவலை குறைக்க, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி மறுத்து, தமிழக அரசு அறிவித்துள்ளது.மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், வார நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், வந்து செல்வர்.தொற்று பரவலைத் தவிர்க்க, அரசு உத்தரவின்பேரில், கோவிலின் அனைத்து வாயில்களும் அடைக்கப்பட்டுள்ளன.நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், ஏராளமான பக்தர்கள், கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்தனர். அவர்கள், நுழைவாயில் கதவுக்கு, மாலை அணிவித்து, சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X