பொது செய்தி

தமிழ்நாடு

கபசுர குடிநீர் வினியோகம்

Added : மே 01, 2021
Share
Advertisement
அன்னுார்; அன்னுாரில், 500 பேருக்கு, இலவசமாக, கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.அன்னுார் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா சார்பில், பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பஸ்ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, பா.ஜ., ஒன்றிய தலைவர் சத்யராஜ் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் கபசுர குடிநீர் வினியோகத்தை துவக்கி வைத்தார்.உள்ளாட்சி

அன்னுார்; அன்னுாரில், 500 பேருக்கு, இலவசமாக, கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.அன்னுார் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா சார்பில், பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பஸ்ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, பா.ஜ., ஒன்றிய தலைவர் சத்யராஜ் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் கபசுர குடிநீர் வினியோகத்தை துவக்கி வைத்தார்.உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் திருமூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், ஒன்றிய செயலாளர் கார்த்தி, ஓ.பி.சி., அணி மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், 500 பேருக்கு, தலா 50 மில்லி கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. 'தொடர்ந்து, அனைத்துப் பகுதிகளிலும், கபசுரக் குடிநீர் விநியோகம் நடைபெறும்' என, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.பெ.நா.பாளையம்கவுண்டம்பாளையம் வட்டாரத்தில் தி.மு.க., சார்பில், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.கவுண்டம்பாளையம், 8வது வார்டு கிரி நகர், நாச்சி கோனார் வீதி பகுதிகளில், மாவட்ட மகளிர் அணி சார்பில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, மகளிர் அணி அமைப்பாளர் எமிமால் தலைமை வகித்தார். மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சித்ரா, துணை அமைப்பாளர் மோகனா, உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X