தடையை மீறி ஆற்றில் இறங்கும் மக்கள்: கொரோனா பரவல் அச்சத்தில் கிராமம்

Added : மே 01, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்; நெல்லித்துறை பவானி ஆற்றில் குளிக்கவும், துணிகள் துவைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், அத்துமீறி, கொரோனா பரவலுக்கு காரணமாக உள்ளனர்.வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள வெல்ஸ்புரத்தில், பவானி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டி, தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. அங்கு குளிக்க போதிய இடவசதி இல்லை. கோவில் அருகே குளிக்க

மேட்டுப்பாளையம்; நெல்லித்துறை பவானி ஆற்றில் குளிக்கவும், துணிகள் துவைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், அத்துமீறி, கொரோனா பரவலுக்கு காரணமாக உள்ளனர்.வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள வெல்ஸ்புரத்தில், பவானி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டி, தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. அங்கு குளிக்க போதிய இடவசதி இல்லை. கோவில் அருகே குளிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், அனைத்து மக்களும், நெல்லித்துறையிலும், விளாமரத்துார் அருகே குண்டுகள் துறையிலும், கஞ்சிபிள்ளையார் கோவில் அருகேயும், பவானி ஆற்றில் குளித்து வருகின்றனர்.பவானி ஆற்றில் துணி துவைக்கவும், குளிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி ஆற்றுக்கு செல்பவர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆற்றுக்குச் செல்லும் வழிகளில், மேட்டுப்பாளையம் போலீஸ், நெல்லித்துறை ஊராட்சி சார்பில், எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.இந்த அறிவிப்பை பொருட்படுத்தாமல், பெரும்பாலானவர்கள் ஆட்டோக்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் வந்து பவானி ஆற்றில் குளித்து வருகின்றனர்.இதுகுறித்து நெல்லித்துறை பொதுமக்கள் கூறுகையில், 'கொரோனா தொற்று அதிகம் பரவி வருகின்ற நிலையில், பவானி ஆற்றில் வெளியூர் ஆட்கள் குளிக்க வருகின்றனர். இவர்களால், கிராம மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.எனவே, போலீசார், நெல்லித்துறை பவானி ஆற்றில் குளிப்பவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X