சூலூர் - திருச்சி ரோட்டில் நெருக்கடி: 'நோ பார்க்கிங்'கில் வாகனங்கள்

Added : மே 01, 2021
Share
Advertisement
சூலுார்; சூலுாரில் திருச்சி ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது.சூலுார் வழியாக கோவை செல்லும் திருச்சி ரோடு, காங்கயம்பாளையம் முதல் பாப்பம்பட்டி பிரிவு வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால், ரோட்டின் ஒரு சில பகுதிகள் அகலமாகின.ஆனால், சூலுார் நகர பகுதியில் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், ரங்கநாதபுரம் பிரிவு வரை ரோட்டின் அகலம்

சூலுார்; சூலுாரில் திருச்சி ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது.சூலுார் வழியாக கோவை செல்லும் திருச்சி ரோடு, காங்கயம்பாளையம் முதல் பாப்பம்பட்டி பிரிவு வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால், ரோட்டின் ஒரு சில பகுதிகள் அகலமாகின.ஆனால், சூலுார் நகர பகுதியில் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், ரங்கநாதபுரம் பிரிவு வரை ரோட்டின் அகலம் குறைவாகவே உள்ளது. இந்த இடங்களில் ரோட்டின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:திருச்சி ரோட்டை விரிவாக்கம் செய்தும் பலனில்லை. நகர பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ரோடு போட்டதால், கடைகள், வங்கி, சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வருவோர், ரோட்டின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நிற்பதால் மெயின் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.'நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகை போலீசார் வைத்தும் எந்த பலனும் இல்லை. அதை மதிக்காமல் அங்கேயே வாகனங்களை நிறுத்துகின்றனர். போலீசாரும் நடவடிக்கை எடுப்பதில்லை.ரோட்டின் நடுவே டிவைடர் கற்கள் வைக்கப்பட்டுள்ளதால், ரோடு குறுகலாகிவிட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனங்களை நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X