தடுப்பணையில் ஒரு வாரமாக உலா வரும் முதலை

Added : மே 01, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னமத்தம்பாளையத்தில் தடுப்பணை உள்ளது. பெ.நா.பாளையம், கூடலுார் கவுண்டம்பாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளின் கழிவு நீர், இத்தடுப்பணையில், சேறு போல தேங்கி நிற்கிறது. தடுப்பணையை சுற்றிலும் புதர் மண்டி கிடக்கிறது.தடுப்பணையில், ஆகாயத்தாமரை படர்ந்துள் ளது. கடந்த, 24ம் தேதி மாலை நேரத்தில் தடுப்
 தடுப்பணையில் ஒரு வாரமாக உலா வரும் முதலை

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னமத்தம்பாளையத்தில் தடுப்பணை உள்ளது. பெ.நா.பாளையம், கூடலுார் கவுண்டம்பாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளின் கழிவு நீர், இத்தடுப்பணையில், சேறு போல தேங்கி நிற்கிறது. தடுப்பணையை சுற்றிலும் புதர் மண்டி கிடக்கிறது.தடுப்பணையில், ஆகாயத்தாமரை படர்ந்துள் ளது. கடந்த, 24ம் தேதி மாலை நேரத்தில் தடுப் பணையில் இருந்து வெளியே வந்த முதலை ஒன்று, கரையில் ஒதுங்கி நின்றது. சுமார், 20 நிமிடங்கள் தரையில் படுத்து இருந்த முதலை, பொதுமக்களின் பேச்சு சத்தம் கேட்டு, மீண்டும் தடுப்பணைக்குள் சென்றுவிட்டது.தகவல் அறிந்த வனத்துறையினர், ஒரு வாரமாக, தடுப்பணையை ஒட்டி சாமியானா அமைத்து, முதலையைப் பிடிக்க, கண்காணித்து வருகின்றனர். முதலை நடமாட்டம், தடுப்பணையில் இருப்பதால், பொதுமக்கள் தடுப்பணை அருகே வரக்கூடாது என, வாய்மொழி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில்,' தடுப்பணை சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளம் உள்ளது. இதில், எப்பகுதியில் முதலை உள்ளது என, கண்டறிவதில் சிரமம் உள்ளது. முதலையால், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், எச்சரிக்கை பலகையை வைக்க வேண்டும். புதர்களை அகற்றி, சுத்தம் செய்ய, ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X