பொது செய்தி

தமிழ்நாடு

18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்த ஆர்வம்; முடங்கியது இணையதளம்

Added : மே 01, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. இன்று (மே 1) முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இதற்காக ஏப்.28 முதல் www.cowin.gov.in அல்லது ஆரோக்கிய சேது செயலி வழியாக

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. இன்று (மே 1) முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக ஏப்.28 முதல் www.cowin.gov.in அல்லது ஆரோக்கிய சேது செயலி வழியாக முன்பதிவு துவங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் குறைந்தது 150 பேர் வரை புதிதாக பாதிக்கப்படுகின்றனர்.கொரோனாவில் இருந்து தப்பிக்க மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்த வரிசையில் காத்து கிடக்கின்றனர். தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோரும் தடுப்பூசி செலுத்த ஆர்வமாக உள்ளனர்.

நேற்று ஒரே நேரத்தில் பலரும் முன்பதிவு செய்ய இணையதளத்தை பயன்படுத்தியதால் சில மணி நேரம் முடங்கியது. இதனால் முன்பதிவு செய்ய முடியாத பலர் தடுப்பூசி முகாம்களுக்கு படையெடுத்தனர். அவர்களை தாங்களாகவே ஆன்லைனில் பதிவு செய்யுமாறு கூறி டாக்டர்கள் திருப்பி அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X