செய்தி சில வரிகளில்...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : மே 01, 2021
Share
வாலிபர் மாயம்வடமதுரை: கொம்பேறிபட்டி மம்மானியூரை சேர்ந்த மில் தொழிலாளி முத்துப்பாண்டி 32. இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். வேடசந்துார் நுாற்பாலையில் பணிபுரிந்த முத்துப்பாண்டி அடிக்கடி யாரிடமோ அலைபேசியில் பேசியுள்ளார். இதை மனைவி கண்டித்த நிலையில் ஏப்.20 முதல் முத்துப்பாண்டியை காணவில்லை. வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.மாத்திரை வழங்கல்திண்டுக்கல்: கொரோனா 2வது அலை

வாலிபர் மாயம்

வடமதுரை: கொம்பேறிபட்டி மம்மானியூரை சேர்ந்த மில் தொழிலாளி முத்துப்பாண்டி 32. இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். வேடசந்துார் நுாற்பாலையில் பணிபுரிந்த முத்துப்பாண்டி அடிக்கடி யாரிடமோ அலைபேசியில் பேசியுள்ளார். இதை மனைவி கண்டித்த நிலையில் ஏப்.20 முதல் முத்துப்பாண்டியை காணவில்லை. வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாத்திரை வழங்கல்
திண்டுக்கல்: கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்க, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. திண்டுக்கல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நேற்று பொது மேலாளர் கணேசன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் 'ஆர்சனிக் ஆல்பம்' மாத்திரைகளை வழங்கினார். திண்டுக்கல், தேனியில் உள்ள 15 கிளைகளிலும் பணியாளர்களுக்கு மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



மோதலில் ஒருவர் கைது
எரியோடு: பாகநத்தம் களத்து வீட்டை சேர்ந்த முத்துச்சாமி, பொன்னுசாமி இடையே இடப்பிரச்னையில் தகராறு ஏற்பட்டது. இருதரப்பும் தாக்கிக் கொண்டனர். முத்துசாமி புகாரில் பொன்னுச்சாமி 58, கைது செய்யப்பட்டார். அவரது மனைவி இந்திராணி, மகன் சுரேஷ் மீதும் வழக்குப் பதிவானது. இதே தகராறில் சுரேஷ் புகாரில் முத்துசாமி, அவரது மனைவி சிவகாமி மீதும் வழக்கு பதிவானது.மூவருக்கு குண்டாஸ்திண்டுக்கல்: ஆர்.கல்லுப்பட்டியை சேர்ந்தவர்கள் தங்கவேல் 38, பெருமாள் 58, குருநாதன் 60. இவர்கள் கடந்த ஏப்.4 ல் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இவர்களை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.,ரவளிப்பிரியா, கலெக்டரிடம் பரிந்துரைத்தார். நேற்று கலெக்டர் விஜயலட்சுமி மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X