தமிழ்நாடு

மாற்றம்! கிளை நூலகங்கள் டிஜிட்டல் மயம்

Added : மே 01, 2021
Share
Advertisement
அனைத்து துறைகளையும் போல் மைய மற்றும் முழு நேர நுாலகங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. ஆனால், கிராமங்களை ஒட்டியுள்ள கிளை நுாலகங்கள் இன்னும் டிஜிட்டல் மயமாக்கப்படவில்லை. இதனால் ஆன்லைனில் புத்தகங்கள் படிக்கும் வசதி, டிஜிட்டல் முறையிலான பயன்பாட்டிற்கு கணினி வசதியில்லை என்ற குறைபாடு இருந்தது.இந்நிலையில் கிளை நுாலகங்களையும் டிஜிட்டல் மயமாக்க அரசு

அனைத்து துறைகளையும் போல் மைய மற்றும் முழு நேர நுாலகங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. ஆனால், கிராமங்களை ஒட்டியுள்ள கிளை நுாலகங்கள் இன்னும் டிஜிட்டல் மயமாக்கப்படவில்லை. இதனால் ஆன்லைனில் புத்தகங்கள் படிக்கும் வசதி, டிஜிட்டல் முறையிலான பயன்பாட்டிற்கு கணினி வசதியில்லை என்ற குறைபாடு இருந்தது.

இந்நிலையில் கிளை நுாலகங்களையும் டிஜிட்டல் மயமாக்க அரசு திட்டமிட்டது.இதற்காக, மாநிலம் முழுதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணினிகளை வழங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 63 கிளை நுாலகங்களுக்கு தலா 4 வீதம் மொத்தம் 320 கணினிகள் வந்துள்ளன. அவற்றை நுாலகங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடக்கிறது.

இதன் மூலம் கிராமப்புற வாசகர்கள் எளிதாக இணைய வசதியை பயன்படுத்தலாம். எந்த நுாலகத்தில் என்னென்ன புத்தகங்கள் உள்ளன என்பதையும் அறியலாம். போட்டித் தேர்வர்கள் தங்களுக்கு தேவையான பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யலாம் என, நுாலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X