பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டு தவணையும் ஒரே தடுப்பூசி; சுகாதாரத்துறை விளக்கம்

Added : மே 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திண்டுக்கல் : 'முதல் தவணையில் செலுத்திய தடுப்பூசியையே 2வது தவணையும் செலுத்த வேண்டும்' என, திண்டுக்கல் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.கொரோனா பரவலை தடுக்க, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகின்றன. இரண்டு தடுப்பூசிகளின் செயல்திறனும் சமமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இரண்டு தடுப்பூசிகளையும் 28 முதல் 43 நாட்கள் இடைவெளியில்
 இரண்டு தவணையும் ஒரே தடுப்பூசி;   சுகாதாரத்துறை விளக்கம்

திண்டுக்கல் : 'முதல் தவணையில் செலுத்திய தடுப்பூசியையே 2வது தவணையும் செலுத்த வேண்டும்' என, திண்டுக்கல் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

கொரோனா பரவலை தடுக்க, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகின்றன. இரண்டு தடுப்பூசிகளின் செயல்திறனும் சமமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இரண்டு தடுப்பூசிகளையும் 28 முதல் 43 நாட்கள் இடைவெளியில் செலுத்தலாம். தற்போது கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அவ்வப்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது.

இரு தவணையும் ஒரே தடுப்பூசியை தான் செலுத்த வேண்டுமா என்ற சந்தேகம் மக்களிடையே நிலவுகிறது. கண்டிப்பாக, முதல் தவணையில் எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அதையே தான் 2வது தவணையிலும் போட்டுக் கொள்ள வேண்டும். ஒரு வேளை மாற்றி செலுத்தினால் தடுப்பூசியின் முழுமையான செயல்திறன் கிடைக்காமல் போகும். எனவே, 2 தவணையும் ஒரே தடுப்பூசி செலுத்துவது அவசியம். திண்டுக்கல், பழநி சுகாதார மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 625 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-மே-202105:55:16 IST Report Abuse
ஆப்பு இரண்டு தடுப்பூசி யும் ஒரே தவணையில் போடாம இருந்தா சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X