பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தியவரும் கபசுர குடிநீர் குடிக்கலாம்

Added : மே 01, 2021
Share
Advertisement
வடமதுரை : 'கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டாலும் கபசுர குடிநீரை தொடர்ந்து குடிக்கலாம்' என்று சித்த மருத்துவர் மீனாகுமாரி தெரிவித்தார்.அவர் கூறியது: கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களும் தாராளமாக கபசுரக் குடிநீர் பயன்படுத்தலாம். கொரோனா பாதித்த சிலருக்கு பேதி ஏற்படுகிறது. அதற்குரிய சித்த மருந்து எடுத்துக் கொள்ளலாம். ஆங்கில மருந்தான பாரசிட்டமால் எடுத்துக் கொண்டே

வடமதுரை : 'கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டாலும் கபசுர குடிநீரை தொடர்ந்து குடிக்கலாம்' என்று சித்த மருத்துவர் மீனாகுமாரி தெரிவித்தார்.

அவர் கூறியது: கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களும் தாராளமாக கபசுரக் குடிநீர் பயன்படுத்தலாம். கொரோனா பாதித்த சிலருக்கு பேதி ஏற்படுகிறது. அதற்குரிய சித்த மருந்து எடுத்துக் கொள்ளலாம். ஆங்கில மருந்தான பாரசிட்டமால் எடுத்துக் கொண்டே கபசுரக் குடிநீரையும் பயன்படுத்தலாம்.

இதனை தயார் செய்ய 5 கிராம் கபசுரக் குடிநீர் சூரணத்தை 100 மி.லி., நீரில் பாதியளவுக்கு வற்றும் வரை காய்ச்சி குடிக்க வேண்டும். பத்து வயதிற்கு குறைந்தவர்களுக்கு 30 மி.லி., போதும். காலை, மாலை என இரு நேரம் குடிக்கலாம்.கொரோனாவை எதிர்க்கும் வைட்டமின் 'சி' சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் லேகியம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X