இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்

Added : மே 01, 2021
Share
திண்டுக்கல் : சனிக்கிழமை இறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ளதால், திண்டுக்கல் இறைச்சி கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது.கொரோனா பரவலை தடுக்க இரவு 10:00 முதல் அதிகாலை 4:00 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. ஞாயிற்றுக் கிழமை இறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ளதால், சனிக்கிழமையே இறைச்சி வாங்க வாடிக்கையாளர்கள் திரண்டனர். இதனால் தொற்று பரவ

திண்டுக்கல் : சனிக்கிழமை இறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ளதால், திண்டுக்கல் இறைச்சி கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது.

கொரோனா பரவலை தடுக்க இரவு 10:00 முதல் அதிகாலை 4:00 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. ஞாயிற்றுக் கிழமை இறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ளதால், சனிக்கிழமையே இறைச்சி வாங்க வாடிக்கையாளர்கள் திரண்டனர். இதனால் தொற்று பரவ வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இந்த வாரம் முதல் சனிக்கிழமையும் இறைச்சி கடைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது.இன்று (மே 1) தொழிலாளர் தினம், மே 2 ஞாயிறு விடுமுறை என்பதால் இறைச்சி வாங்க வெள்ளிக்கிழமை காலை முதலே இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்டில் மக்கள் குவிந்தனர். அனைத்து கடைகளிலும் விற்பனை களை கட்டியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X