வெளிமாநில பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாநில பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

Added : மே 01, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல் வரும் வெளிமாநில ரயில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க, அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ரயில்களில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளின் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவுவதை தடுக்க தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் உத்தர விட்டார்.அதன்படி, வெளி

திண்டுக்கல் : திண்டுக்கல் வரும் வெளிமாநில ரயில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க, அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ரயில்களில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளின் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவுவதை தடுக்க தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் உத்தர விட்டார்.

அதன்படி, வெளி மாநிலங்களில் இருந்து திண்டுக்கல் வரும், இங்கிருந்து வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளின் உடல் வெப்பநிலை 'டிஜிட்டல் ஸ்கேனர்' மூலம் பரிசோதிக்கப்படுகிறது.உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என, நிலைய மேலாளர் கோவிந்தராஜ் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X