சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டுக்கோழிக்கு கண்ணி ரூ.20 ஆயிரம் அபராதம்

Added : மே 01, 2021
Share
Advertisement
வால்பாறை : மானாம்பள்ளி வனச்சரகம், கல்லார்பிரிவு தனியார் காடுகள் தோட்ட பகுதியில், வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில், வனவர் சிவக்குமார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சங்கிலி ரோடு இடைச்சோலை பகுதியில், வடமாநில தொழிலாளர்கள் உமேஷ்ஓரா, 43, மதியாஸ்முண்டா,31, ஆகியோர் காட்டுக்கோழியை கண்ணி வலை சுருள் வைத்து பிடிக்க முயற்சி

வால்பாறை : மானாம்பள்ளி வனச்சரகம், கல்லார்பிரிவு தனியார் காடுகள் தோட்ட பகுதியில், வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில், வனவர் சிவக்குமார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சங்கிலி ரோடு இடைச்சோலை பகுதியில், வடமாநில தொழிலாளர்கள் உமேஷ்ஓரா, 43, மதியாஸ்முண்டா,31, ஆகியோர் காட்டுக்கோழியை கண்ணி வலை சுருள் வைத்து பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கோழியை பிடிக்க கண்ணி வைத்திருப்பதை ஒப்புக்கொண்டனர்.அவர்கள் இருவர் மீதும், வனஉயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X