பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டேஷனில் கொரோனா 'டெஸ்ட்' ; மதுரையை பின்பற்றுமா பாலக்காடு

Added : மே 01, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட, ரயில்வே ஸ்டேஷன்களில், பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகே, வெளியில் அனுமதிக்கப்படுகின்றனர்.கடந்த ஒரு மாதமாக, நாடு முழுக்க கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. அதில் ஒரு பகுதியாக, மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் இறங்கும் பயணிகளுக்கு கொரோனா

பொள்ளாச்சி : மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட, ரயில்வே ஸ்டேஷன்களில், பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகே, வெளியில் அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஒரு மாதமாக, நாடு முழுக்க கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. அதில் ஒரு பகுதியாக, மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் இறங்கும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகே, ஸ்டேஷனுக்கு வெளியில் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து, ரயில்களில் வருபவர்களை சோதனை செய்து, நோய் தொற்று பரவலை தடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின் உத்தரவின் பேரில், மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் பிரசன்னா, மதுரை கோட்ட எல்லைக்குட்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம் ஆலோசனை நடத்தி, மாநில சுகாதார அதிகாரிகளை ரயில் நிலையங்களில் பயணிகளை சோதிக்க பணியமர்த்த வேண்டுகோள் விடுத்தார்.

முதல் கட்டமாக, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மாவட்ட சுகாதார அதிகாரிகள் ரயில்களில் வரும் பயணிகளை கொரோனா தொற்று பரிசோதனை செய்து நகருக்குள் அனுமதித்து வருகின்றனர். இதே போல், கேரள - தமிழக எல்லையான பொள்ளாச்சியிலும், கேரளாவில் இருந்து வரும் ரயில் பயணிகளுக்கு தொற்று பரிசோதனை செய்து அனுமதிக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X