பொது செய்தி

தமிழ்நாடு

'வனத்துக்குள் திருப்பூர்-7' திட்டம் துவக்கம்: மரக்கன்றுகள் நட குழி எடுக்கும் பணி தீவிரம்

Added : மே 01, 2021
Share
Advertisement
உடுமலை; உடுமலை பகுதிகளில், 'வனத்துக்குள் திருப்பூர்-7' திட்டத்தின் கீழ், நடப்பாண்டு மரக்கன்று நடுவதற்கு குழிகள் எடுக்கும் பணி துவங்கியது.மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், வெற்றி அமைப்பின் 'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.கடந்த, ஆறு திட்டங்களில், 10 லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்கு, 10.35 லட்சமாக

உடுமலை; உடுமலை பகுதிகளில், 'வனத்துக்குள் திருப்பூர்-7' திட்டத்தின் கீழ், நடப்பாண்டு மரக்கன்று நடுவதற்கு குழிகள் எடுக்கும் பணி துவங்கியது.மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், வெற்றி அமைப்பின் 'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.கடந்த, ஆறு திட்டங்களில், 10 லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்கு, 10.35 லட்சமாக உயர்ந்தது. இத்திட்டத்தின் கீழ் நடவு செய்யப்படும் மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்பட்டு, பசும் சோலைகளாக மாறியுள்ளது.பசுமை பயணத்துக்கு முடிவில்லை என்பதால், 7வது திட்டத்துக்கான ஆயத்த பணிகளும் துவங்கியுள்ளது. இத்திட்டத்திலும், இரண்டு லட்சம் மரக்கன்று நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உடுமலை பகுதியில், கடந்தாண்டு வனத்துக்குள் திருப்பூர் திட்டம்-6ல், 86 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. நடப்பாண்டு, தென் மேற்கு பருவ மழை காலத்தில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது. நேற்று, செஞ்சேரிபுத்துார், தொட்டியாதுறை ரேவதி என்பவருக்கு சொந்தமான நிலத்தில், குழி எடுக்கும் பணி நடந்தது.வனத்துக்குள் திருப்பூர் திட்ட குழுவினர் கூறியதாவது:மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில் இத்திட்டம், ஏழு ஆண்டாக செயல்படுத்தப்படுகிறது. நீர்ப்பற்றாக்குறை காரணமாக, விவசாயம் செய்ய முடியாத நிலங்களில், நிலம் உரிமையாளருக்கு சொந்தம்; மழையும், துாய காற்றும் மக்களுக்கு சொந்தம் என்ற அடிப்படையில், மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.அதே போல், பாதுகாப்பான பொது இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள் உதவியுடனும், தனியார் தொழிற்சாலை, கோழிப்பண்ணை வளாகங்களிலும் மரக்கன்றுகள் நடப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், மரக்கன்று நடவு செய்து பராமரிக்க விருப்பம் உள்ளனர்கள், கள அலுவலரை, 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X