4 தாலுகாவில் 103 பேருக்கு கொரோனா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

4 தாலுகாவில் 103 பேருக்கு கொரோனா

Added : மே 01, 2021
Share
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகாவில், 103 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சி வெங்கடேசா காலனி அழகப்பா லே - அவுட் பகுதியில், நான்கு பேருக்கும், கட்ட பொம்மன் வீதி, குப்பாண்டர் வீதி, ஆறுமுகம் வீதி, வெங்கடேசா காலனி, வடுகபாளையம் கொங்கு நகர், டி. கோட்டாம்பட்டி சுப்பையா நகர், எஸ்.ஆர்., லே - அவுட், பாலக்காடு ரோடு, மகாலிங்கபுரம், கோவை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகாவில், 103 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியானது.

பொள்ளாச்சி நகராட்சி வெங்கடேசா காலனி அழகப்பா லே - அவுட் பகுதியில், நான்கு பேருக்கும், கட்ட பொம்மன் வீதி, குப்பாண்டர் வீதி, ஆறுமுகம் வீதி, வெங்கடேசா காலனி, வடுகபாளையம் கொங்கு நகர், டி. கோட்டாம்பட்டி சுப்பையா நகர், எஸ்.ஆர்., லே - அவுட், பாலக்காடு ரோடு, மகாலிங்கபுரம், கோவை மெயின் ரோடு, ஜோதிநகர் ஏ காலனி, பி.கே.எஸ்., காலனி உள்ளிட்ட பகுதிகளில், தலா ஒருவர் என, மொத்தம், 18 பேருக்கு தொற்று உறுதியானது.

தெற்கு ஒன்றியம் சீனிவாசபுரத்தில் ஏழு பேர், சூளேஸ்வரன்பட்டியில் ஐந்து பேருக்கும், ஊஞ்சவேலாம்பட்டி, மாக்கினாம்பட்டியில் தலா, மூன்று பேர், ஜமீன் ஊத்துக்குளி, மாக்கினாம்பட்டி மின்நகரில் தலா இரண்டு பேர், ஏ.நாகூர், சீலக்காம்பட்டி, நல்லாம்பள்ளி, வஞ்சியாபுரம், அகிலாண்டபுரம், குஞ்சிபாளையம், தேவநல்லுார், கோலார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம், 32 பேருக்கு தொற்று உறுதியானது.வடக்கு ஒன்றியத்தில், பொன்னாயூர், சின்ன நெகமம் பகுதிகளில் தலா இருவர்; திப்பம்பட்டி, ஆச்சிப்பட்டி, நெகமம், அய்யம்பாளையம், ஜமீன் புரவிபாளையம், ஆர். பொன்னாபுரம், வடக்கிப்பாளையம், மண்ணுார் பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம், 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தாலுகாவில், சொலவம்பாளையம், சொக்கனுார், கிணத்துக்கடவு பேரூராட்சி, கோவில்பாளையம், தாமரைக்குளம் பகுதியில், 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் வீடுகள் மற்றும் சுற்றுப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

ஆனைமலை

ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதுார், காளியாபுரம் உள்பட பல பகுதிகளில், நேற்று ஒரே நாளில், 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த பத்து நாட்களாக, ஆனைமலை ஒன்றியத்தில் தொற்று அதிகரித்து வருவதால், சுகாதாரத்துறையினர் கொரோனா பரவல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வால்பாறை

வால்பாறை, ரொட்டிக்கடை பகுதியை சேர்ந்த, 64 வயது முதியவர் கடந்த, 28ம் தேதி சளி மற்றும் காய்ச்சல் காரணமாக, வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நேற்று தொற்று உறுதியானது.

வால்பாறையில் இது வரை, கொரோனா தொற்றால், 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறையில், மொத்தம், 103 பேருக்கு தொற்று உறுதியானது.காய்ச்சல் முகாம்! பொள்ளாச்சி நகராட்சியில் நான்கு இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதில், 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 23 பேருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டது.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்களில், நேற்று மொத்தம், 500 பேருக்கு கொரோனா தடுப்பூசிபோடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X