சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முறையாக குடிநீர் வழங்க பொதுமக்கள் திடீர் போராட்டம்

Added : மே 01, 2021
Share
Advertisement
உடுமலை-சின்னகுமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்கள் நேற்று, குடிநீர் வழங்க வில்லை என, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து தடைபட்டது.மேலும், ஊராட்சித்தலைவர், அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யாமல், அருகேயுள்ள கிராமத்திற்கு, தனியார் குழாய் அமைத்து தண்ணீர் எடுத்துச் சென்றதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. அமராவதி போலீசார் சம்பவ

உடுமலை-சின்னகுமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்கள் நேற்று, குடிநீர் வழங்க வில்லை என, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து தடைபட்டது.மேலும், ஊராட்சித்தலைவர், அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யாமல், அருகேயுள்ள கிராமத்திற்கு, தனியார் குழாய் அமைத்து தண்ணீர் எடுத்துச் சென்றதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. அமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.ஊராட்சித்தலைவர் புவனேஸ்வரி கூறியதாவது: கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, தலா, 60 ஆயிரம் லிட்டர் மற்றும் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. குழாய் உடைப்பு, நீரேற்று நிலையத்தில் பிரச்னை போன்ற காரணங்களால், வினியோகம் தடைபடுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X