தமிழ்நாடு

மக்கள் மனசுல யாரு! ஓட்டு எண்ணிக்கையில் முடிவு தெரியும்; வேட்பாளர்களுக்கு நாளை 'ரிசல்ட்'

Added : மே 01, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, உடுமலையில் உள்ள, ஐந்து சட்டசபை தொகுதிகளில், யார் வெற்றி பெறுவர் என்பது நாளை நடைபெறும் ஓட்டு எண்ணிக்கையில் தெரியவரும்.சட்டசபை தேர்தல் ஏப்.,6ல் நடந்தது. உடுமலை தொகுதியில், அ.தி.மு.க.,- காங்., உட்பட, 15 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இங்கு, 380 ஓட்டுச்சாவடிகளில் நடந்த ஓட்டுப்பதிவில், 95 ஆயிரத்து, 427 ஆண்கள், 97 ஆயிரத்து, 205 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர், 2 பேர் என, ஒரு

பொள்ளாச்சி, உடுமலையில் உள்ள, ஐந்து சட்டசபை தொகுதிகளில், யார் வெற்றி பெறுவர் என்பது நாளை நடைபெறும் ஓட்டு எண்ணிக்கையில் தெரியவரும்.

சட்டசபை தேர்தல் ஏப்.,6ல் நடந்தது. உடுமலை தொகுதியில், அ.தி.மு.க.,- காங்., உட்பட, 15 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இங்கு, 380 ஓட்டுச்சாவடிகளில் நடந்த ஓட்டுப்பதிவில், 95 ஆயிரத்து, 427 ஆண்கள், 97 ஆயிரத்து, 205 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர், 2 பேர் என, ஒரு லட்சத்து, 92 ஆயிரத்து, 634 பேர் ஓட்டளித்திருந்தனர். ஓட்டு சதவீதம், 71.41 ஆக இருந்தது.

மடத்துக்குளம் தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க., உட்பட, 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு, 357 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. 94 ஆயிரத்து, 426 ஆண்களும், 81 ஆயிரத்து, 699 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், ஒருவர் என, ஒரு லட்சத்து, 76 ஆயிரத்து, 126 பேர் ஓட்டளித்திருந்தனர். ஓட்டுப்பதிவு சதவீதம், 70.88 ஆகும்.ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நாளை, காலை, 8:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்குகிறது.

முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டதும், உடுமலை தொகுதியிலுள்ள, 380 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுக்கள், 14 டேபிள்களில், 28 சுற்றுக்களில் எண்ணப்படுகிறது.அதே போல், மடத்துக்குளம் தொகுதியில், 357 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுக்கள், 14 டேபிள்களில், 26 சுற்றுக்களாக எண்ணப்படுகிறது.

பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு தொகுதிகளில் பதிவான ஓட்டுக்கள், கோவை ஜி.சி.டி.,கல்லுாரியில் எண்ணப்படுகிறது.

பொள்ளாச்சி தொகுதியில், அ.தி.மு.க.,- தி.மு.க.,என, 9 பேர் போட்டியிட்டனர். இங்கு, 318 ஓட்டுச்சாவடிகளில், 88 ஆயிரத்து, 826 ஆண்கள்; 88 ஆயிரத்து,636 பெண்கள்; மூன்றாம் பாலினத்தவர், 3 என, ஒரு லட்சத்து, 75 ஆயிரத்து, 465 பேர் ஓட்டளித்தனர். ஓட்டுப்பதிவு சதவீதம், 79.77 ஆகும்; இங்கு, 23 சுற்றுக்களாக ஓட்டு எண்ணப்படுகிறது.

வால்பாறை தொகுதியில், அ.தி.மு.க.,- இ.கம்யூ., உட்பட, 6 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். இங்கு, 294 ஓட்டுச்சாவடிகளில், 70 ஆயிரத்து, 918 ஆண்கள்; 73 ஆயிரத்து, 116 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 3 பேர் என, ஒரு லட்சத்து, 44 ஆயிரத்து, 33 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர். ஓட்டுப்பதிவு சதவீதம், 70.10 ஆகும். 21 சுற்றுக்களாக ஓட்டு எண்ணப்படுகிறது.

கிணத்துக்கடவு தொகுதியில், 14 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 485 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு, ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 839 ஆண்கள்; ஒரு லட்சத்து, 15 ஆயிரத்து, 939 பெண்கள்; 10 மூன்றாம் பாலினத்தவர், என, 2 லட்சத்து, 29 ஆயிரத்து, 788 பேர் ஓட்டளித்தனர். ஓட்டுப்பதிவு சதவீதம், 70.30 ஆகும். 35 சுற்றுக்களாக ஓட்டு எண்ணப்படுகிறது.

ஒவ்வொரு தொகுதிக்கும், தலா, 14 டேபிள்களும், தனி அறையில் தபால் ஓட்டுக்களுக்கு, 2 டேபிள்களும் அமைக்கப்பட்டுள்ளன.ஓட்டு எண்ணிக்கைக்கான டேபிள் - சேர்கள், சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு டேபிளுக்கும், 'சிசிடிவி' கேமரா, நுண் பார்வையாளர் மற்றும் ஓட்டு எண்ணிக்கை அலுவலர், உதவியாளர் என, மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் பார்க்கும் வகையில், கம்பி தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.முதல் ஒரு சில சுற்றுக்களில், முன்னிலை நிலவரமும், மதியத்திற்கு மேல், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர் விவரமும் தெரியவரும். இம்முறை, கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டதால், ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வெளியாவதில், தாமதம் ஏற்படும். குறைந்த சுற்றுக்கள் உள்ள தொகுதி முடிவுகள் மாலையிலும், மற்றவை படிப்படியாக அறிவிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X